Show all

முதன்முதலாக உண்மையைப் போட்டு உடைக்கும் அதிமுக பாராளுமன்றஉறுப்பினர் நாகராஜன்

அ.இ.அ.தி.மு.க. சார்பில் இப்போதும் பதவி வகித்துவரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எல்லோரும் சசிகலா செல்வாக்கால் பதவி பெறவில்லை என்று அவரவர் குழந்தைகள் பிள்ளைகள் மீது சத்தியம் பண்ணுங்கள்.

நானும் சத்தியம் பண்றேன் என்று கோவை அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன் கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜன். அப்போது அவர் முன் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நாங்கள் எல்லாம் சகோதரர்கள். இப்போது அப்படித்தான் இருப்போம். அப்புறம் எல்லோரும் ஒன்று சேர்ந்துகொள்வோம். பன்னீர்செல்வம் இந்த ஆட்சியைப் பற்றி பேசாத பேச்சா? பாண்டியராஜன் ஜெயலலிதா பொம்மையை வைத்து ஆர்கே நகரில் பிரசாரம் செய்தார்.

எல்லாம் அப்படித்தான் எங்களுக்கு நெஞ்சு கொதித்தது. அவர்கள் இப்போது துணைமுதல்வர், மாண்புமிகு அமைச்சராக ஆகவில்லையா? அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

எல்லாம் அப்படித்தான். தினகரன் ஆதரவு தேவை இரட்டை இலை எங்களுக்கு கிடைக்க தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவும் தேவை.

யார்தான் இந்தக் கட்சியில் சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரால், ஆளாகவில்லை.

சசிகலா அவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீட்டுகளை தேர்வு செய்தார்கள். எல்லாமே சசிகலாதான் அந்தக் குடும்பம்தான் அமைச்சர்கள் யார் யார் என்பதை முடிவு செய்தது.

எங்கே இப்போது சொல்லுங்கள். முக்கிய முடிவுகள் எல்லாமே அமைச்சர்கள்தான் எடுத்தோம் என்று.

எல்லா துறை சார்ந்த முடிவுகள் எல்லாமே சசிகலா சொல்லித்தான் எடுக்கப்பட்டது. அதுதான் உண்மை.

இன்று சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் குடும்பத்தை ஒதுக்கிவைக்கச் சொல்லும் எல்லோருமே மனசாட்சி படி சொல்லுங்கள்.

அந்தக் குடும்பம் இல்லாமல், நான் கார் வாங்கினேன், பொருள் வாங்கினேன், தோப்பு வாங்கினேன்; என்று.

அவர்களை ஒதுக்கி வைக்க சொல்லுபவர்கள், சசிகலா இல்லாமல் நான் சொத்து வாங்கினேன் என்று அவரவர் குழந்தைகளை பிள்ளைகளை கீழே போட்டு அவங்க மீது சத்தியம் பண்ணுங்க பார்ப்போம்.

நானும் சத்தியம் பண்றேன். எல்லாமே அவங்க மூலம்தான் வந்தது. அப்படி வந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு கட்சிக்கு கொடுத்துவிட்டு அதிமுகவை காப்பாற்ற வாங்க பார்ப்போம்.

இப்போது அந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைப்பது என்பது ஒரு ராஜ தந்திர முயற்சி. அவ்வளவுதான். அதுக்காக சசிகலா குடும்பம் இல்லாமல் அதிமுக இல்லைங்க. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் பலர் கட்சியைவிட்டு போனபோது, சசிகலா குடும்பம் தானே ஜெயலலிதா கூட இருந்து கட்சியை காப்பாற்றியது என்று கொந்தளித்தார் நாகராஜன்.

தினகரன் அணியின் போக்கிலிருந்து புரியும் விசயம்:

சசிகலா பன்னீரை முதல்வராக்கியது தமிழ்மக்கள் மனதையும், பாஜகவின் ஒத்துழைப்பையும் ஆழம் பார்க்க. சசிகலா முதல்வராக முயன்றதால் பன்னீர் எட்டப்பர் ஆனார்; பாஜக துணைநின்றது; சசிகலா சிறைக்கு அனுப்பப் பட்டார்.

சசிகலா எடப்பாடியை முதல்வராக்கினார்; தினகரன் கண்காணிப்பில். தினகரனையும் சிறைக்கு அனுப்புகிறோம்; நீங்களும் எட்டப்பர் ஆகிவிடுங்கள் என்றது பாஜக, எடப்பாடியை.

எட்டப்பர்கள் முதல்வர், துணை முதல்வர் பாஜக ஒத்துழைப்பில்.

பாஜக ஆதிக்கத்தைத் தாண்டி, பாஜகவளைத்த சிறைப்பறவைகள் ஆட்சியைக் கலைத்தாவது அதிமுகவை எட்டப்பர்களிடம் இருந்து மீட்டாக வேண்டும் என்று செயல்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.