Show all

இன்று நிறைவுநாள்! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபடும் கட்சிகளின் பரப்புரைகளுக்கு

இத் தேர்தலில், ஆளும் திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. தமிழ்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜகவும் தனித்து போட்டியிடுகிறது. அதிமுக சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறது.

05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நாளை மறுநாள் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. பலமுனை போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், ஆளும் திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. தமிழ்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கும் பாஜகவும் தனித்து போட்டியிடுகிறது. அதிமுக சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறது. 

உள்ளூர் மக்களின் ஆதரவுடன் வெற்றிபெறும் முனைப்பில் தன்னார்வ வேட்பாளர்களும் ஏராளமானோர் களமிறங்கியுள்ளனர். 10 நாட்களுக்கு மேலாக களைகட்டிய தேர்தல் பரப்புரை, இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று இறுதிக் கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. நாளை மறுநாள் பதிவாகும் வாக்குகள், வரும் செவ்வாய்க் கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,162.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.