Show all

கண்ணேறு கழிப்போம் வாருங்கள் தமிழர்களே! கழியட்டும்- தமிழ்நாட்டின் மீது படிந்துள்ள பாஜக கண்ணு மோடி கண்ணு ரவி கண்ணு

ஆளுநர் இரவியின் பேச்சின் வெளிப்பாடு உணர்த்திய விடையம். பாஜகவின் நீட், சரக்கு சேவை வரி, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்பனவெல்லாம் ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் தமிழ்நாட்டின் வளர்ச்சி பொறுக்காத்தனம் தான் தமிழ்நாட்டின் மீது வீசப்பட்ட கண்ணடி தான்
 
18,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் முதன்மையானது தமிழ்நாடு. மருத்துவர்கள் எண்ணிக்கை, பட்டப்படிப்பு படிப்பவர்கள் எண்ணிக்கை, பெண்கள் கல்லூரிகளுக்கு செல்வது, கிராமப்புற சாலைகள், கிராமப்புற பேருந்து வசதி, பள்ளிகள். சத்துணவு, பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக்கு இலவச மின்சாரம், அனைவருக்கும் நூறு அலகு மின்சாரம் இலவசம், சமத்துவபுரங்கள், குடிசை மாற்று வாரியம், என்று பற்பல விடையங்களில் தமிழ்நாடுதான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

ஒப்பீட்டளவில் தமிழ்நாடு பல வளர்ந்த நாடுகள் அளவிற்கு அல்லது வளர்ந்த நாடுகளை விட அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதே வரலாற்றில் பதிந்துள்ள உண்மை

முதன்மையாக பல்வேறு இலவச திட்டங்கள் காரணமாக ஏழை மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கின்றன. 

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி பாஜகவின் குருதியிலேயே ஊறிப்போன தமிழ்நாட்டின் மீதான பொறாமை கண்ணை, பொறுக்காத் தனத்தை- தமிழ்நாடு கால்நடை மருத்துவ இயல்அறிவு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா- பேச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.

தலைமை அமைச்சர் மோடி வந்த பின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியம் ஆகி உள்ளது. இது மாநிலங்களுக்கு, மக்களுக்கு, பிராந்தியங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை போக்கி உள்ளது. என்பதாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டின் வளர்ச்சியை தனது பேச்சில் விமர்சனம் செய்திருந்தார். 

இது பாஜகவின்  தமிழ்நாட்டின் மீது வீசப்பட்ட கண்ணடி, பொறுக்காத்தனம் என்பதால்- தமிழர் அனைவரும், தமிழ்நாட்டின் மீது படிந்துள்ள பாஜக கண்ணு மோடி கண்ணு ரவி கண்ணு கழியட்டும் என்று தமிழ்நாட்டிற்கு கண்ணேறு கழிப்போம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,205. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.