Show all

பாஜகன்னாலே சும்மா அதிருதில்ல! ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்டத்தில் உள்ள தலையாய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார். உள்ளூர் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களைத் தவித்துவிட்டு, ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவைக்கு, இரண்டு நாள் பயணமாக வந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு அதிகாரிகள் மற்றும் பாஜக அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

ஆலோசனை நடைபெற்ற சுற்றுலா மாளிகையை, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அந்த அமைப்பின் பொதுச்செயலாளார் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் முற்றுகையிட்டனர்.

‘அப்போது, மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து, தமிழக ஆளுநர் உத்தரவு வழங்குவது மாநில உரிமைகளைப் பறிக்கின்ற, நசுக்குகின்ற செயல்

என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் குற்றம் சாட்டினர்.

ஆளுநரே திரும்பப் போ, திரும்பப் போ என முழக்கம் எழுப்பியபடியே, அவர்கள் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.