Show all

வாக்காளர் பட்டியலில் தமிழ் மக்களுக்கான பேரதிர்ச்சி! கோவை வாக்காளர் பட்டியலில், ஹிந்தியில் இடம் பெற்ற பெயர்கள்

கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர் இருவரது பெயர்கள் ஹிந்தியில் இடம் பெறச்செய்த அடாவடி முன்னெடுக்கப்பட்டுள்ளது 

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர் இருவரது பெயர்கள் ஹிந்தியில் இடம் பெறச்செய்த அடாவடி முன்னெடுக்கப்பட்டுள்ளது 

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி கடந்த வியாழக்கிழமை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டார்.

இந்தநிலையில் கோவை மாநகராட்சி 69வது பகுதிக்கு உட்பட்ட தேர்தல்;அறை எண் 842, வரிசை எண் 633ல் சாய்பாபா காலனி, பாரதி பூங்கா 8-வது குறுக்கம் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது தந்தையான சூரஜ் பெயர்கள் ஹிந்தியில் இடம்பெற்றுள்ளன.

வாக்காளர் பட்டியலில் ஹிந்தியில் பெயர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் அடாவடியை, சமூக வலைதளங்களில் மிகுதியாகப் பகிர்ந்தும், மிகுதியானோர் தங்கள் கண்டனத்தைப் பதிவிட்டும் வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:- ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர் மனோஜ்குமார் மற்றும் அவரது தந்தை சூரஜ் ஆகியோரின் பெயர்கள் ஹிந்தியில் இடம் பெற்று இருந்துள்ளது. 

அதனால் தற்போது கோவை மாநகராட்சி வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் பட்டியலிலும் மாற்றம் இல்லாமல் வந்துவிட்டது. எனவே மனோஜ்குமார் விருப்பப்பட்டால் 8-வது படிவம் மூலம் விண்ணப்பித்து, தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளலாம், என்று அவர் கூறினார். 

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும்; ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களை தமிழில் அமைத்துக் கொள்ள படிவம் 8ஐ பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.