Show all

முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்! மாணவர்கள் பாசப்போராட்ட ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்

09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகில் உள்ள வெளியகரம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் பகவான். மாணவர்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக, பணி நிரவல் அடிப்படையில் ஆசிரியர் பகவான், ஆசிரியை சுகுணா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பகவானின் இடமாறுதலைக் கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவரைக் கட்டிப்பிடித்து கதறி அழுதனர். இதனால், அவரின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வன், வெளியகரம் பள்ளிக்கு நேற்று சென்று ஆய்வு நடத்தினார். தலைமை ஆசிரியர், ஆசிரியர் பகவான், அங்கு பணியாற்றும் சில ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அதுதொடர்பாக அறிக்கையை விரைவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் சமர்பிக்க உள்ளார். ஆசிரியர் பகவானுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இடையே நடந்த பாசப்போராட்ட காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பரவியது. அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன. அவரின் இடமாறுதல் ரத்தாகுமா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது. இதனால்தான் அவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். கலந்தாய்வு மூலம் அவர்களுக்குப் புதிய பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியில் அந்தப் பிரிவு பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் உள்ளார். மாணவ, மாணவிகள் போராட்டத்தால் ஆசிரியர் பகவான் உடனடியாக விடுவிக்கப்படவில்லை. மாணவ, மாணவிகளை சமரசப்படுத்திவிட்டு அவரை அங்கிருந்து விடுவிக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். அதற்காக மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் பேசிவருகின்றனர். இதனால், இன்னும் சில நாட்களில் ஆசிரியர் பகவான், அவர் கலந்தாய்வில் தேர்வு செய்த அருங்குளம் பள்ளிக்கு இடமாற்றப்படுவார். ஆசிரியை சுகுணா, ஏற்கெனவே இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் விதிப்படிதான் இடமாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

நல்ல ஆசிரியர் என்றால் மற்ற பள்ளி மாணவர்களும் பயன் பெற, இந்தப் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்;;சியோடு அவரின் இடமாற்றத்திற்கு விடையளி;க்கலாம்.  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,827. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.