Show all

அறுபது சுழற்சி ஆண்டுகள் பற்றி தெரியுமா

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம் பழந்தமிழ் முன்னோர் காலத்தில் சுழல் ஆண்டு கணக்கும் உண்டு, தொடர் ஆண்டு கணக்கும் உண்டு. பழந்தமிழர்கள், நுட்பமான கணக்கீடுகளைக் கொண்ட தொடர் ஆண்டுக் கணக்கை பொரும்பாலும் நிமித்தகர்களும்,  சுழல் ஆண்டுக் கணக்கை பொதுமக்களும் பயன் படுத்தி வந்தனர். தொடக்கத்தில் அறுபது ஆண்டுகள், மரங்களின் பெயரால் அழைக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது. 

ஆரியர்கள் தமிழ் அறிஞர்களின் இடத்தில் தாங்களும் ஒட்டிக் கொண்ட போது, அறுபது ஆண்டுகளுக்கு வடமொழிப் பெயர்கள் சூட்டி பயன்படுத்தினர். அந்த அறுபது ஆண்டு பெயர்களுக்கும் அறுவருப்பான ஒரு கதையையும் கட்டினார்கள்.   

அறுபது தற்பறை ஒரு விநாழிகை, அறுபது விநாழிகை ஒரு நாழிகை அறுபது நாழிகை ஒரு நாள், என்பது போலவே அறுபது ஆண்டுகள் ஒரு தலைமுறை அறுபது தலைமுறை ஒரு யுகம் என்றும் கணக்கு வைத்திருந்தனர் நம் தமிழ் முன்னோர்.

தமிழகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு பெரியாரால் முன்னெடுக்கப் பட்ட போது, அருவறுப்பான சுழல் ஆண்டு பெயர்களின் கதை, கேள்விக்குள்ளாக்கப் பட்டது.

அப்போது தனித்தமிழ் ஆர்வலர்கள் ஒரு சாரர் அந்த அறுபது ஆண்டு வட மொழிப் பெயர்களையும் தமிழ்ப் படுத்தலாயினர். 

மற்றொரு சாரர் கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் திருவள்ளுவர் முற்பட்டவர் கிறித்து ஆண்டோடு 31ஐ கூட்டி திருவள்ளுவர் ஆண்டாக பயன் படுத்தலாம். மேலும் தை மாத இரண்டாம் நாளை திருவள்ளுவர் ஆண்டுக்கான தொடக்க நாளாகப் பயன் படுத்தலாம் என்று முடிவெடுத்து திமுக அரசு சட்டமும் ஆக்கியது. 

இன்று பிறக்கிற 5120வது தமிழ்த் தொடர் புத்தாண்டு நிமித்தகர்கள் (சோதிடர்கள்) மட்டுமே 5119 ஆண்டுகளாக பஞ்சாங்கக் கணக்குகளுக்கு பயன் படுத்தி வருகிற நுட்பமான கணக்கீடுகளைக் கொண்டதால் பொதுமக்கள், இந்தத் தொடர் ஆண்டுக் கணக்கை ஒரு பொருட்டாகவே மதித்திடவே யில்லை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,757.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.