Show all

தமிழக இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் பாஜக வைப்புத் தொகை இழந்தது

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிமுக- திமுக வேட்பாளர்கள் இடையே வாக்கு வித்தியாசத்தில் ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கான மாற்றம் ஏதும் இல்லை. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஒரு வகையில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதே காரணம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் அதேவேளையில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்ட தேமுதிகவின் பலம் இந்த தேர்தலில் மேலும் சரிந்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக 1,179 வாக்குகளுடனும் தேமுதிக- 1070 வாக்குகளுடனும் வைப்புத் தொகை இழந்துள்ளன. இந்தியாவையே மற்றத்திற்கு உள்ளாக்கப் போகிறவர்கள் மண்ணைக் கவ்வினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. தஞ்சாவூரிலும் பாஜக 2940 வாக்குகள் தேமுதிக 1092 வாக்குகள் பெற்றுள்ளன. திருப்பரங்குன்றத்தில் பாஜக - 6559 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 4105 வக்குகள் மட்டுமே பெற்றுள்ளன. மூன்று தொகுதிகளிலும் தேமுதிக பாஜக வைப்புத் தொகை இழந்தன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.