Show all

அன்னப்பூரணி மீதான திறனாய்வுகள்! இதுபோல வட இந்திய மக்களும் கிளம்பினால், இந்தியா மிக விரைவில் நிமிர்ந்துவிடும்.

ஏதோ பிடிக்கப்போய் ஏதோ உருவம் கிடைத்த கதையாக அன்னப்பூரணி அரசு அம்மா என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியாரினியின் காணொளிகள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்இனம் அறிவார்ந்த இனமாக பல்லாயிரம் ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தமிழர் வாழ்வியல் அறிவார்ந்தது. தமிழர் நடுவே- 'தான் வல்லவன்' என்று ஒருவன் நிறுவுவது மிகப்பெரும்பாடு ஆகும். தமிழனை தமிழ் என்கிற- அறிவாக இயங்குகிற- மொழித்தளத்தில் மட்டுமே இணைத்துக் கொண்டாட முடியும்.  

சாதி, மதம், அரசியல், தமிழர்களுக்கான தலைப்பு அல்லாத- உயிர்த்தேடல் (ஆன்மீகம்) ஆகியவற்றில் மிகச்சிலரை ஏமாற்றியும் வாழ்மானத்திற்காகவும் சிறு குழுவாக இணைத்துக் கொள்ளலாமே அன்றி வட இந்தியாவில் முழுமக்கள் கூட்டமும் பார்ப்பனியத் தொல்கதை மூடநம்பிக்கைகளில்- காமசாஸ்திர பாலியல் பிறழ்வுகளில் கட்டி ஆள்வதும், நேற்று காங்கிரஸ் இன்று பாஜக அவற்றை பயன்படுத்திக் கொண்டு வளம் பெறுவதும் போல- தமிழ்நாட்டில் எந்தப் பருப்பையும் வேகவைக்க முடியாது. கெட்டிகாரன் புளுகு எட்டு நாளில் என்று புளுகுகளை தோலுரித்து தொங்கவிட்டு விடுவார்கள் தமிழ்மக்கள்.

அந்த வகையில் நடப்பு அரங்கத்தில் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருபவர்: திடீர் பெண் சாமியாரினி 'அன்னப்பூரணி அரசு அம்மா' ஆவார். 

அன்னப்பூரணி அரசு அம்மா என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியாரினி ஒருவரின் காணொளிகள் அண்மையில் கவனம் ஈர்த்தன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பேரறிமுகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின், கள்ளக்காதல் கட்டப்பஞ்சாயத்தில் சிக்கிய பெண் தற்போது ஆதிபராசக்தி அவதாரம் என தன்னை நிறுவிக் கொள்ள முனையும் முயற்சியே இது என்று அந்தக் கவனம் திசை திரும்பி இருக்கிறது. 

ஏதோ பிடிக்கப்போய் ஏதோ உருவம் கிடைத்த கதையாக அன்னப்பூரணி அரசு அம்மா என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியாரினியின் காணொளிகள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அன்னப்பூரணி அரசு அம்மா என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியாரினியின் காணொளியில்: அன்னப்பூரணி அரசு அம்மாவைக்காண வந்த பக்தர்கள் கூட்டத்திற்கு அருள்பாலிப்பது போல- கை தூக்கி காட்சி தந்தபடி மெதுவாக நடந்து வருகிறார் அன்னப்பூரணி அரசு அம்மா. பின்னணியில் அவருக்கு சிறப்புஏற்றும் வகைக்குப் பாடல் ஒலிக்கிறது.

தொடர்ந்து ஒரு இளம்பெண் அவர் பாதத்திற்கு அடியில் படுத்துக்கொண்டு 'அம்மா, அம்மா எங்க அம்மா' என்று கதறுகிறார். 

இந்த நிலையில் அன்னப்பூரணி அம்மாவின் வரலாற்றை ஆராயத் தொடங்கினர் இணையத்தமிழ் ஆர்வலர்கள். அந்த ஆய்வு பத்தாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீட்க முயல்கிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேரறிமுக கட்டப் பஞ்சாயத்து நிகழ்ச்சியில் சோக முகத்துடன் அரசு என்பவருடன் இணையாக அமர்ந்துள்ளார் அன்னப்பூரணி. எதிர் வரிசையில் அரசின் மனைவி, அன்னப்பூரணியின் கணவர் அமர்ந்துள்ளார்கள். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை இருக்கும் அரசுக்கும், அன்னப்பூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தனியாக வசிப்பது வரை சென்றுள்ளது. அது இரு குடும்பத்திற்கு தெரிந்து பஞ்சாயத்தாகி இருக்கிறது. அன்னப்பூரணி - அரசு இணை தங்களுக்கு மணவிலக்கு தந்துவிடும் படி அந்நிகழ்ச்சியில் கேட்கின்றது.

அன்னப்பூரணி அரசு அம்மா காணொளி போன்ற, ஏராளமான வடஇந்தியக் காணொளிகள், இணையத்தில் ஒவ்வொரு நாளும் உலாவந்து கொண்டுதான் இருக்கின்றன. அம்மணச்சாமியார்- குடும்பப் பெண்ணிற்கு அருள்பாலிப்பது போன்ற காணொளிகளும் அவற்றுள் அடக்கம். 

ஆனால், தமிழ்நாடு போல வடஇந்திய மக்கள் அறிவார்ந்த திறானாய்வுக்குக் கிளம்பாமல் இருப்பது தாம் ஒன்றிய ஆட்சியில் ஆதிக்கவாதிகள் தொடர்வதற்கு காரணமாக அமைந்து இந்தியாவை உலக அரங்கில் முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் அடையாளம் என்று நிறுவிய படேல் சிலையிலிருந்து நமது குழந்தைகளுக்கு விளையாட வாங்கித் தருகிற சிறுசிறு விளையாட்டுப் பொருட்கள் வரை சீனத்தயாரிப்பாக இருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,110.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.