Show all

நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர சரியான தருணம்; என, ரசிகர்கள் கோரிக்கை

சல்லிக்கட்டு பிரச்னையில், ரஜினிகாந்த், தனது கருத்தை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர் அரசியல் பிரச்னைகளிலும், மவுனத்தை களைத்து, களத்தில் இறங்குவார் என, ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நடிகர் ரஜினி, அரசியலுக்கு வர வேண்டும் என, ரசிகர்கள் பல

ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

     ஒவ்வொரு முறையும் ரஜினியின் புதிய படங்கள் திரைக்கு வரும் முன், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி, அவர் பேசும், பஞ்ச் வசனங்கள், ஊடகங்கள் வழியே கசிந்து, பரபரப்பு ஏற்படுத்தும்.

இதனால், அவரது புதிய படத்திற்கும், மவுசு ஏற்படும். ஆனால், படம் வெளி வந்த பின், அந்த அலை அடங்கும்.

     இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வு காரணமாக, தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை நிரப்ப, தி.மு.க, தலைவர், ஸ்டாலின், முதல்வர், பன்னீர் செல்வம் போன்றோர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

     இந்தச் சூழலை கருத்தில் கொண்டு, ரஜினி அரசியலுக்கு வரலாம் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதை உறுதி செய்யும் வகையில், ஜல்லிக்கட்டு குறித்து, பொங்கல் நாளில், நடிகர் ரஜினி தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

     சென்னையில் நேற்று நடந்த, பத்திரிகை விருது நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி பேசுகையில், சல்லிக்கட்டுக்கு எந்த விதமான விதிமுறைகளையும் கொண்டு வரலாம். ஆனால், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற, சல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த வேண்டியது கட்;டாயம். நமது முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த கலைபண்பாட்டு ஆவணங்களை நாம் காப்பாற்றியாக வேண்டும், என்றார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. சல்லிக்கட்டு பிரச்னை குறித்து, இதுவரை அமைதியாக இருந்த ரஜினி, முதல்முறையாக மவுனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த செயல்பாடு, அரசியலிலும் தொடர வேண்டும் என, ரசிகர்கள் சிலர் கூறினர்.

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.