Show all

மு.க.ஸ்டாலின் வாழ்த்து! இளவல் உலக கோப்பையை வென்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு

பன்னாட்டு துடுப்பாட்டக் கழகத்தின் உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 அகவைக்கு உட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின் 

24,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆயிரம் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் துடுப்பாட்ட அணிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கீச்சுவில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

பன்னாட்டு துடுப்பாட்டக் கழகத்தின் உலகக்கோப்பையை 5-வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான 19 அகவைக்கு உட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆயிரம் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் துடுப்பாட்ட அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,151.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.