Show all

உலகக் கோப்பையை வென்றது யார்! டி20 துடுப்பாட்டத்தின் இன்றைய இறுதிச்சுற்றில்

ஆஸ்திரேலியா 8 மட்டை இலக்கு வேறுபாட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏழாவது டி20 உலக கோப்பை துடுப்பாட்டப் போட்டி அமீரகத்தில் கடந்த நான்கு கிழமைகளாக நடைபெற்று வந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்தத் துடுப்பாட்டத் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு, பூவா தலையாவில் ஆஸ்திரேலியா வென்று பந்துவீச்சை  தேர்வு செய்தது.

உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த இங்கிலாந்து அரைஇறுதியுடன் வெளியேற்றப்பட்டது. விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி சிறப்பு-12 சுற்றை கூட தாண்டவில்லை.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டிக்கான பூவா தலையா சுண்டப்பட்டதில், ஆஸ்திரேலிய அணி அதில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.

ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது. நியூசிலாந்து இறுதிச் சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். 

உலக கோப்பையை வெல்வதில் இரு அணி வீரர்களும் புது தெம்புடன் களமிறங்கினர். 50 ஓவர் உலக கோப்பையை 5 முறை வசப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பை தான் இன்னும் எட்டாக்கனியாக இருந்த நிலையில், இன்று நியூசிலாந்தை வென்று வாகை சூடியுள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா 8 மட்டை இலக்கு வேறுபாட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,067.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.