Show all

இலங்கை அணிக்கு 386 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 386  ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றது.

3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 21 ரன்கள் எடுத்திருந்தது. 4வது நாள் ஆட்டத்தை விராட் கோலியும் ரோகித்தும் தொடர்ந்தனர். விராட் கோலி 21 ரன்னில் பிரதீப் பந்தில் தாரங்காவிடம் பிடி கொடுத்தார். அடுத்து வந்த ரோகிச் சர்மா 50 ரன்னிலும் பின்னி 49 ரன்னிலும், ஓஜா 35 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி274  ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 111 ரன்கள் கூடுதலாக பெற்றதால், மொத்தம் 385 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்சைதொடக்க வீரர்கள் தாரங்காவும் சில்வாவும் தொடக்கினர்.  தாரங்காவும் கருணரத்னேவும் டக் அவுட் ஆனார்கள். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.