Show all

இலங்கையில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஷசாங் மனோகர், இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடரை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்காததால் இழுபறி நீடித்தது.

அதன் பிறகு ஷசாங் மனோகரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்த இருதரப்பும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அந்தந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்றதும் விரைவில் போட்டி தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியது. இவ்விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறும் என்று கூறிஉள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.