Show all

ஆஸ்திரேயாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: 2-1 என முன்னிலை

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி 66.5 ஓவர்களில் 151 ரன்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ-ஆன் ஆனது. 292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடியது. 

ஆனால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது.  இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 84 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று ஆட்டம் மழை காரணமாக உணவு இடைவேளை வரை ஆட்டம் நடைபெறவில்லை, அதன் பிறகு தான் தொடங்கியது. 

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 89.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்க உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.