Show all

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன்படி முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இந்திய அணிய அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 83 ரன்களும், முன்னாள் கேப்டன் டோனி 79 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதற்கு முன்பு மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 164 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்ததால் 21 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களும் விழ்த்தினர்.

இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 21ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.