Show all

மூன்றாவது டெஸ்டிலும் ஏமாற்றிய இந்தியா: முதல் இன்னிங்சில் 187 ரன்களில் ஆட்டமிழந்தது

இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3  இருவது ஒவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க சென்றுள்ளது. ஏற்கனவே முதல் டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இப்போட்டியில் ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக ரகானே மற்றும் புவனேஷ்குமார் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கே.எல். ராகுல் ரன் ஏதும் சேர்க்காமலும், முரளி விஜய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா மற்றும் கேப்டன் கோலி 3-வது விக்கெட்டுக்கு ஓரளவுக்கு அணியை சரிவில் இருந்து மீட்டனர். கோலி 54 ரன்களும் புஜாரா 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் புவனேஷ்குமார் தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். புவனேஷ்குமார் மட்டும் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 77 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், மோர்கல், நிகிடி, ஹெலுக்வேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

அதன்பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 6 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆடி வருகிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.