Show all

ஹர்பஜன்சிங், கீதா பஸ்ரா இணையும் திருமண விழா இன்று நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன்சிங் (வயது 35). இவரும், பிரபல இந்தி நடிகை கீதா பஸ்ராவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். கீதா பஸ்ரா இங்கிலாந்தில் பிறந்தவர் என்றாலும் அவரது பெற்றோர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். பெற்றோர் சம்மதத்துடன் ஹர்பஜன்சிங், கீதா பஸ்ராவை இன்று கரம் பிடித்தார். திருமண விழாவில், ஹர்பஜன் சிங், வௌ;ளை நிற ஷெர்வானியும் சிகப்பு நிற டர்பனையும் அணிந்திருந்தார்.

ஹர்பஜன்சிங்கின் சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே பக்வாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இன்று திருமணம் முடிந்த நிலையில் பிரமாண்ட விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும், மணமக்கள் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

நவம்பர் 1-ம் தேதி புதுடெல்லியில் கோலாகல வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவராஜ் சிங், விராட் கோலி ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப், ஷாரூக் கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் டெல்லியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.