Show all

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்களும் மற்றும் ஸ்டோனிக்ஸ் 47 ரன்களும் குவித்தனர். இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தவான் (0), கோஹ்லி (3), அம்பதி ராயுடு (0) என ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் சிறப்பாக விளையாடிய தோனி 51 ரன்னும் ரோஹித் ஷர்மா 133 ரங்களும் குவித்தனர். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.