பிராமணியத்தின் இயல், முழுக்க முழுக்க தமிழியலின் திரிபும் பேரளவு புனைவும் ஆகும், என்று தெளிவுபடுத்திட உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5126: மெய் ஒன்றல்ல இரண்டு. என்று தெரிவிப்பதற்கானது இருமெய் என்கிற இருமை. இருமை என்பது தமிழ்முன்னோர் கண்டறிந்து நிறுவிய கோட்பாடு. அந்த இரண்டு மெய்களில் ஒன்று மெய்மெய் என்கிற மெய்மை. இரண்டு பொய்மெய் என்கிற பொய்மை. அந்த இருமைகள் முதலெனப்படுவது இடமும் காலமும் என்கிற இரண்டாக தொடங்குகிறது என்பது தமிழ்முன்னோர் நிறுவல். இடம் என்பது மெய்மை. காலம் என்பது பொய்மை. இடம் இயக்கமும், எல்லையும் இல்லாதது. காலத்திற்கு இயக்கமும் உண்டு எல்லையும் உண்டு. தனிஒன்றுகள் வெளியில் இயங்குகிற காரணம்பற்றி இயக்கம் இல்லாத வெளி இயக்கம் பெற்ற விண்வெளி ஆகிறது. தான் தோன்றியாக இயங்கிய தனிஒன்றுகள், பொருந்துமுக எதிரியக்கம் காரணமாக இரண்டு நான்கு என ஒன்றித்ததால் வளர்ந்து- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்குவகை கூட்டியக்கங்களாக புத்தியக்கங்கள் உருவாகிறது. இந்த நான்கையும் கூட்டப்பெயரில் நான்மறை என்கின்றனர் தமிழ்முன்னோர். இயற்கையின் நோக்கம் வளர்தலும், உருவாகுதலும் என்று தமிழ்முன்னோர் இதைப் புரிந்து கொண்டுள்ளனர். அடுத்த கட்டத்தில் விண்வெளி, தனக்கு இயக்கம் தந்த நான்மறைகளை முயக்கும் விசும்பு ஆகிறது. நான்மறைகளின் இயக்கம், விசும்பின் முயக்கம் அடிப்படையில் நான்மறைகளை இறை என்றும், விசும்பைக் கடவுள் என்றும் நிறுவுகின்றனர் தமிழ்முன்னோர். இறை கோள்களாக, ஓரறிவு உயிரிகள் முதல் ஆறறிவு உயிரியான மனிதன் வரை வளர்ச்சியையும் புத்தியக்கத்தையும் முன்னெடுக்கிறது. புத்தியக்கம் ஒவ்வொன்றும் வேறு வேறாக அமைவதற்குக் காரணம், அவற்றுக்கிடையிலான எண்ணிக்கை மாற்றமே என்பதை தமிழ்முன்னோர் புரிந்து கொண்டுள்ளனர். உலகினரின் தனிமப்பட்டியலும் எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்தின் அடிப்படை என்பதற்கு எடுத்துக்காட்டு. நாம் இத்தனையையும் விளக்க முற்பட்டது இருமை என்கிற தமிழியல் கோட்பாட்டைப் புரிய வைத்தலுக்கு ஆகும். இந்த இருமையை சமஸ்கிருதம் துவம் என்கிற சொல்லால் அழைக்கிறது. தே என்றால் சமஸ்கிருதத்தில் இரண்டு. பிராமணியத்தின் அடிப்படை: ஒன்றிலிருந்து எல்லாம் என்பதாக பேசப்பட்டாலும், தமிழியலிலை புரிந்து கொள்ள முயன்ற வகைக்கு கிடைத்த, எப்படி இரண்டு இருக்க முடியும்? ஒன்றிலிருந்துதானே எல்லாம் என்பதே ஆகும். பிராமணியக் கோட்பாட்டிற்கு அத்துவைதம் என்றே தலைப்பிட்டு தங்கள் கோட்பாட்டிற்கு தமிழியலின் இருமையே அடிப்படை என்று ஒப்புக் கொள்கின்றனர். சிலர் ஏகத்துவம் என்றும் சொல்ல முயல்வார்கள். அதிலும் அவர்களால் தமிழியலின் இருமையில் இருந்து விலகிவிட முடியவில்லை. ஏகத்துவத்தில் இருக்கிற ஏக் என்றால் ஒன்று. துவத்தில் இருக்கிற துவம் என்றால் இரண்டு. அ துவைதம் என்பதாக துவைதம் அல்ல, அதாவது இரண்டின் அடிப்படை அல்ல என்று சொல்வதில் இருந்து தங்கள் தனி அடையாளத்தை இழந்து இருமையை எதிர்த்து இருமை அடையாளத்தையே இயல்பூக்கமாகத் தங்களுடையதாக்கிக் கொள்கிறது பிராமணியம். தனிமனிதன் நிறுவிய கருத்தியல் என்பதைக் குறிக்க தத்துவம் என்கிற சமஸ்கிருதச் சொல் பயன்படுகிறது. அதுவும் தன் இருமை என்கிற தலைப்பை கொண்டாடி இயல்பூக்கமாக தமிழியலே தனது அடிப்படை என்பதைச் சொல்லாமல் சொல்வதாகிறது. தமிழ் தொடராண்டு 1400ல் வடநாவலந்தேயத்திற்கு, பெரும் ஆண்கள் கூட்டமாக வருகை புரிந்திருந்த பிராமணர்களுக்கு ஆடை நாகரிகமோ, சொந்தமாக மொழியே, சொந்தமாக எந்த இயலும் இருந்திருக்கவில்லை. பிராமணர்கள் தங்களுக்கான சமஸ்கிருத மொழியை தமிழின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டார்கள். வடநாவலந்தேயத்தில் அடுத்து அமைந்த முகலாயப் படையெடுப்பில் பிராமணர்களுக்கு பல வடஇந்திய மொழிகளும் ஹிந்தியும் கிடைத்தன. பிராமணியத்தின் இயல், முழுக்க முழுக்க தமிழியலின் திரிபும் பேரளவு புனைவும் ஆகும். பிராமணியம் கொண்டாடும் ஹிந்தி மொழி, முழுக்க முழுக்க உருது மொழியே. ஹிந்தி மொழியை அரபியல் எழுதினால் அது உருது. உருது மொழியை சமஸ்கிருதத்தில் எழுதினால் அது ஹிந்தி.
இடமும் காலமும் முதலாவது நிலையில் வெளி ஆகவும் தனி ஒன்றுகளாகவும் அமைகிறது.
ஒன்றனுக்கான சிறப்பு அடையாளத்தைத் தனி என்கிற தமிழ்ச்சொல்லோடு துவம் என்கிற சமஸ்கிருதச் சொல்லை இணைத்து தனித்துவம் என்று பயன்படுத்துவதில், தனி அடையாளம் என்கிற தனித்துவத்திலும் இருமை இருக்கிறது என்று இயல்பூக்கமாக அமைந்து விடுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,312.