Show all

காவல்துறையிடம் சிக்கியுள்ளார் ராமமூர்த்தி! தொழில்நுட்பத் திறமையை குறுக்கு வழியில் செயல்படுத்தியமையால்

இந்தியன் பிரிமியர் லீக்கின் துடுப்பாட்டப் போட்டியைக் கட்டணமில்லாமல் காண தனி செயலியை உருவாக்கி ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கே அதிர்ச்சி கொடுத்த சிவகங்கை இளைஞரை கைது செய்துள்ளது ஹைதராபாத் காவல்துறை.

06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியன் பிரிமியர் லீக்கின் துடுப்பாட்டப் போட்டியைக் கட்டணமில்லாமல் காண தனி செயலியை உருவாக்கி ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கே அதிர்ச்சி கொடுத்த சிவகங்கை இளைஞரை கைது செய்துள்ளது ஹைதராபாத் காவல்துறை.

இந்தியாவில் கொண்டாடிகளை அதிகம் கொண்டது துடு;ப்பாட்ட விளையாட்டு. துடுப்பாட்டப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றன. அதிலும், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளை ஒளிபரப்ப அதிக விலை கொடுத்து எடுக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை 16,347 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் பிரிமியர் லீக் நேரடி ஒளிபரப்பு எந்தவொரு அனுமதியும் இல்லாமல் செயலி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. அதில் பல விளம்பரங்களும் வருகின்றன, சட்டவிரோதமாக அந்த செயலியை நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஸ்டார் இந்தியா நிறுவன அதிகாரி கடாரம் துப்பா ஹைதராபாத் சுழியம் குற்றவியல் காவல்துறையினல் புகார் கொடுத்தார்.

இதை விசாரிக்க தொடங்கிய ஹதராபாத் சுழியம் குற்றவியல் காவல்துறையினரால் குற்றவாளியை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடலில், தமிழ்நாட்டின் சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்த ராமமூர்த்தி என்று இளைஞர் தான் அந்த செயலியை உருவாக்கியவர் என்பதைக் கண்டுபிடித்தனர்.

நேற்று காஞ்சிரங்காலுக்கு வந்த ஹைதராபாத் சுழியம் குற்றவியல் காவல்துறை, ஆறுமுகம் என்பவரின் மகன் ராமமூர்த்தியைக் கைது செய்து சிவகங்கை அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தியது. பின்னர் கூடுதல் விசாரணைக்காக அவரை ஹைதராபாத் அழைத்துச் சென்றனர்.

தன் தொழில்நுட்பத் திறமையை ஆக்கப்பாட்டு முறையில் செயல்படுத்தாமல் குறுக்கு வழியில் செயல்படுத்தி காவல்துறையிடம் தற்போது சிக்கியுள்ளார் ராமமூர்த்தி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,223. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.