Show all

வடஇந்திய ஆதிக்க அடாவடிகளின் நலனுக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது!

வேறு வகையான கல்வித் திட்டத்தில் படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, நீட்தேர்வு, தொடர்பில்லாத வகைக்கான முன்னெடுப்பு என்பதை சமூகநீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு தொடர்பில்லாத வடஇந்திய ஆதிக்கவாதிகளுக்கு புரிந்து கொள்ள விருப்பம் இல்லை. வடஇந்திய ஆதிக்க அடாவடிகளின் நலனுக்கான நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. 

28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இந்தியா முழுவதும் 3,862 மையங்களில்  16.14 லட்சம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டிருந்திருக்கின்றனர்.

முதன்முறையாக தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் இந்த நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தேர்வு தமிழில் இருந்தாலும், வேறு வகையான கல்வித் திட்டத்தில் படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இது தொடர்பில்லாத வகைக்கான முன்னெடுப்பு என்பதை சமூகநீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு தொடர்பில்லாத வடஇந்திய ஆதிக்கவாதிகளுக்கு புரிந்து கொள்ள விருப்பம் இல்லை. 

தமிழ்நாட்டில் 70 ஆயிரம் மாணவிகள் 40 ஆயிரம் மாணவர்கள் என 1.10லட்சம் பேர்கள் நீட் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. புதுச்சேரியில் 14 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வன்றே ஒரு மாணவர் தன்னை- சமூகநீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு தொடர்பில்லாத வடஇந்திய ஆதிக்கவாதிகளுக்கு புரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் தேவையில்லாத நீட் தேர்வு முன்னெடுப்புக்கு எதிராக பலியாக்கிக் கொண்டுள்ளார். 

இந்த நிலையில் இன்று நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வரைவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிகை செய்யப்பட்டது. 

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழடிக்கப்படுகிறது. இதனால் இந்த தேர்விலிருந்து விலக்கு கோரி கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு குறித்து ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு மக்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி பதிகை செய்த ஆய்வு அறிக்கையில் நீட் தேர்வு வேண்டாம் என்றே விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் பதிகை செய்தது. 

நேற்று கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே நீட்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் கோழையூர் மாணவர் தனுச தேர்வு எழுத செல்வதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார். 

நீட் தேர்வு விலக்கு கோரும் சட்டவரைவை பதிகை செய்வதாக ஸ்டாலின் அறிவித்ததும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது சட்டவரைவை பதிகை செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நீட் தேர்வு சமத்துவமின்மை வளர்க்கிறது. சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் நீட் விலக்கு சட்டவரைவு கொண்டு வரப்படுகிறது. நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை அல்ல என்பது அறங்கூற்றுவர் ஏகே. ராஜன் குழு அறிக்கை மூலம் தெளிவாகிறது. 

கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களின் நம்பிக்கை, கனவை தகர்த்துள்ளது. கட்டாயமாக இந்தத் தேர்வை எதிர்கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. 

பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கவே நீட் தேர்வு. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் போன்ற சமூகத்தினருக்கு நீட் தேர்வு எதிரானது என அறங்கூற்றுவர் ராஜன் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தகுதி, தரத்தை நீட் தேர்வு உறுதி செய்வதாக தெரிவிப்பது அப்பட்டமான புளுகு. குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர மட்டுமே நீட் தேர்வு உதவியுள்ளது என கூறிய ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டவரைவைப் பதிகை  செய்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,005.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.