Show all

கொரோனா தொற்று மூலம் இந்தியாவின் பதிப்பு ரூ.52 லட்சம் கோடி! இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிக்கை

தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் பொருளாதார உற்பத்தி கிட்டத்தட்ட ரூ. 52 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது, என  இந்திய கட்டுப்பாட்டு வங்கி 'நாணயம் மற்றும் நிதி அறிக்கை' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: கொரோனா தொற்று மூலம் இந்தியாவின் வணிகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், மக்களின் உடல்நலம் என அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

இந்தப் பாதிப்பில் இருந்து இந்தியா எப்போது முழுமையாக வெளியேறும் என்பது குறித்து இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி முதன்மையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து இந்தியா முழுமையாக வெளியில் வர இந்தியாவுக்கு இன்னும் 12 ஆண்டுகள் எடுக்கும் என்று இந்திய கட்டுப்பாட்டு வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் பொருளாதார உற்பத்தி கிட்டத்தட்ட ரூ. 52 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது, என இந்திய கட்டுப்பாட்டு  வங்கி 'நாணயம் மற்றும் நிதி அறிக்கை' என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு நிதியாண்டின் வளர்ச்சியுடன் கூடுதலான வளர்ச்சியை அடைந்தால் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்புகளைத் தீர்க்க முடியும். அந்த வகையில் இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீள குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் வரையில் தேவைப்படும் என இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி கணித்துள்ளது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,235.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.