Show all

குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்பவில்லை!

கொரோனா குறுவித் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என்பதையே பல்வேறு ஆதாரங்கள் நிறுவுகின்றன.

04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையா என்கிற கேள்விக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தொற்றுநோயியல் துறை தலைவர் முனைவர் சமிரன் பாண்டா கூறியதாவது:

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குத்தாம் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். பெரிய அளவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள். அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடாது. குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்பவில்லை. எனவே கொரோனா தடுப்பூசியை பெரியவர்களுக்குத்தான் போட வேண்டும். பிற கொரோனா கால கட்டுப்பாட்டு வழிகாட்டும் நெறிமுறைகளை பெரியவர்கள்தான் பின்பற்ற வேண்டும்.

பெரியவர்களில் குறிப்பாக பாதிக்கப்படுகிற பிரிவினராக உள்ள முதியவர்கள், இணை நோய் உடையவர்கள் போன்றோருக்கு தடுப்பூசிகளின் இரண்டு தடவைகளையும் செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். 

கொரோனா குறுவித் தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என்பதையே பல்வேறு ஆதாரங்கள் நிறுவுகின்றன.

பெரியவர்களைப் போல இல்லாமல், குழந்தைகள் கொரோனா குறுவியின் மோசமான பாதிப்புகளை சந்திக்க மாட்டார்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது தேவையற்ற வேலை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,043.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.