Show all

முதல்முறையாக ஜம்முவில் தலைமைஅமைச்சர் மோடி! சிறப்புத் தகுதி பறிப்பிற்குப் பின்

ஜம்மு காஷ்மீருக்கு மாநில சிறப்பு தகுதி வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவு ஒன்றிய பாஜக அரசால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டு ஒன்றிய பகுதிகளாக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக நேற்று ஜம்மு வருகை தந்துள்ளார் மோடி. 

12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு பறிக்கப்பட்டு ஒன்றிய பகுதிகளாக்கப்பட்டதற்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு ஒன்றியப் பகுதிக்கு வருகை தந்தார் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி. நேற்றைய நாளில், இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஒன்றிய பஞ்சாயத்து அரசாங்க நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் கிராம அவைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இப்படியொரு கிராம அவைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்று பொதுவெளியில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்காசன் ஆவார். 

தற்போது இந்தியா முழுவதும் இந்தக் கிராம அவைக்கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டி போடுகின்றன. 

ஒன்றிய பஞ்சாயத்து அரசாங்க நாள் ஆண்டுதோறும் 11,சித்திரை அன்று (ஏப்ரல் 24) இந்தியாவில் மட்டும் கொண்டாடப்படும் நாளாகும். இக்கொண்டாட்டத்தை பஞ்சாயத்து அரசாங்க  அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

பஞ்சாயத்து அரசாங்க சட்டம் குறித்து சுருக்கமாகத் தெரிவிக்க வேண்டுமென்றால, மாநில அரசைக் கடந்து நேரடியாக ஒன்றிய அரசு கிராம பஞ்சாயத்துக்கள் மீது அதிகாரம் செலுத்தும் வகைக்கானது ஆகும். 

பஞ்சாயத்து அரசாங்க சட்டத்தை முன்னாள் இந்தியத் தலைமைஅமைச்சர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். இச்சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளும் கிராம மக்களும் கிராம அளவில் தாங்களே நிர்வாகத்தை நடத்துவதற்கான உரிமை வழங்கப்படுகிறது. மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை குறைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன், அதிகாரத்தை பகிர்ந்துகொள்வது கட்டாயமாக உள்ளது. இந்நாளில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கான விருது வழங்கப்படுகிறது.

இந்த நாளையொட்டி ஜம்மு ஒன்றியப் பகுதி சம்பா மாவட்டத்தில் பாலி பஞ்சாயத்திலும் கிராம அவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி இன்று சிறீநகருக்கு வருகை தருந்தார். இந்தக் கூட்டத்தில் பஞ்சாயத்து அரசாங்க உறுப்பினர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

தலைமை அமைச்சரின் ஜம்மு பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஜம்மு காஷ்மீருக்கு மாநில சிறப்பு தகுதி வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவு ஒன்றிய பாஜக அரசால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டு ஒன்றிய பகுதிகளாக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக நேற்று ஜம்மு வருகை தந்துள்ளார் மோடி. 

முன்னதாக தலைமைஅமைச்சர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவில் வெடிகுண்டு வெடித்தது. அதேபோல் சஞ்வான் பகுதியில் ஒன்றியத் தொழிற் பாதுகாப்பு படையினர் முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,229.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.