Show all

முதல்கூட்டம் முன்னெடுப்பு! இந்தியாவில் குறளிச் செலாவணி நிதியின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதிக்க

குறளிச் செலாவணியைத் தடை செய்ய முடியாது, ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக அமைந்தது. இந்தியாவில் குறளிச் செலாவணி நிதியின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதிக்க முன்னெடுக்கப்பட்ட முதல் கூட்டத்தில்

30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நாடாளுமன்றக் குழுவில், இந்தியாவில் குறளிச் செலாவணி நிதியின் பரந்த வரையறைகளைப் பற்றி விவாதிக்கும் வகைக்கான முதல் கூட்டத்தில், குறளிச் செலாவணியைத் தடை செய்ய முடியாது, ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக அமைந்தது.

ஜெயந்த் சின்கா தலைமையிலான நிதிநிலைக் குழு, திங்கட்கிழமையன்று குறளிச் செலாவணி சந்தைகள், கட்டச்சங்கலி (பிளாக்செயின்) மற்றும் குறளிச் சொத்துக்கள் குழு, தொழில் அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களைச் சந்தித்து, இந்தியாவில் குறளிச்செலாவணியை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துவது தொடர்பான கவலைகளைப் பற்றி விவாதித்தது.

நாட்டில் குறளிச் செலாவணியைச் சுற்றியுள்ள முதலீட்டு திறன் மற்றும் அபாயங்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து நிறைய கவலைகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் குறளிச்செலாவணியை யார் ஒழுங்குபடுத்துவார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு ஒழுங்குமுறை பொறிமுறையை வைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமித்த கருத்து இருந்தது.

முதலீட்டாளர்களின் பணத்தின் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் மிகவும் தீவிரமான கவலை தெரிவிக்கப்பட்டது. குறளிச் செலாவணிகள் அந்த வகை முதலீட்டாளர்களின் ஆட்சிமை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய நாளிதழ்களில் முழுப்பக்க குறளிச் செலாவணி விளம்பரங்கள் குறித்து கவலை தெரிவித்தனர்.

குறளிச்செலாவணி பாடுகள் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு வங்கி அதிகாரிகளுடன் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்தக் குழுவின் கூட்டம் முதன்மைத்துவம் பெறுகிறது.

குறளிச்செலாவணி நிதி குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டுள்ள இந்திய மேலாண்மைக் கழகம் அகமதாபாத்தைச் சேர்ந்த முதன்மைப் பரிமாற்றங்களின் இயக்கிகள், இந்தியத் தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட தொழில்துறை முழுவதிலும் உள்ள பங்குதாரர்களை நாங்கள் அழைத்துள்ளோம், என்று சின்கா கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள்- இப்போது அரசு அதிகாரிகள் குழுவின் முன் அணியமாகி தங்கள் கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறார்கள். குறளி- நிதியின் வாய்ப்புகள் மற்றும் அறைகூவல்கள் எனும் தலைப்பில், இந்த விடையத்தில் சங்கங்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்பதே இந்த கூட்டத்தின் அதிகாரப்பாட்டு நிகழ்ச்சி நிரளாக இருக்கும் என கூறுகின்றனர்.

குறளிச் செலாவணியைச் சட்டஅடிப்படை ஒப்பந்தமாக அங்கீகரித்துள்ள ஒரே நாடு எல் சால்வடார் என்று மற்றொரு பாராளுமன்ற கூறினார். நிதியமைச்சகம் ஏற்கனவே பங்குதாரர்களுடன் பல சந்திப்புகளை நடத்தி, ஒழுங்குமுறை சிக்கல் பற்றி விவாதித்துள்ளது.

பாதிக்கப்படக்கூடிய சில்லறை முதலீட்டாளர்களை மனதில் வைத்து, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி, இந்திய பங்கு மற்றும் பரிமாற்ற வாரியம்  ஆகியவையும் இந்தியாவில் குறளிச்செலாவணிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைப் பற்றி கவலை தெரிவித்துள்ளன.

குறளிச்செலாவணிகளைத் தடை செய்யும் கட்டுப்பாட்டு வங்கியின் சுற்றறிக்கையை உச்சஅறங்கூற்றுமன்றம் இருபது மாதங்களுக்கு முன்பே களைந்து விட்டது.

இந்நிலையில், திங்கட்கிழமை நடந்த குறளி-நிதி குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் குறளிச் செலாவணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டமுன்வரைவை ஒன்றிய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நடப்பு மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் புதிய சட்டமுன்வரைவு கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,069.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.