Show all

தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என்று கோவின் செயலி தெரிவிக்கிறதே! குழப்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலர்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது நமது பாதுகாப்புக்கு என்பதையும் தாண்டி, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் போதாது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு முறையான சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவை என்கிற தேவையும் இருக்கிறது. ஆனால் அதற்கு கோவின் செயலியின் ஒத்துழைப்பில் குறைபாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. 

29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அரசு சிறப்பு முன்னெடுப்பு எல்லாம் அமைத்து போரளவாக கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. 

ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நமது பாதுகாப்புக்கு என்பதையும் தாண்டி, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் போதாது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு முறையான சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவை என்கிற தேவையும் இருக்கிறது.

சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே வெளிநாடுகள் செல்ல முடியும் என்ற நிலை மாறி, தற்போது அண்டை மாநிலங்கள், தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் கூட செல்ல தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ்கள் தேவை என்ற நிலை நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இருந்தால் வேலைக்கு வரலாம் என அறிவித்துள்ளன.

பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்துவதோடு, அதற்கான சான்றிதழை பெறுவதும் கட்டாயம் என்றாகிவிட்டது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஆங்காங்கே பல பேர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக செல்பேசிக்கு சேதி வரவில்லை, தடுப்பூசி செலுத்தியதற்கான  சான்றிதழை கோவின் செயலியில் பெறலாம் என்று முயற்சித்தால், தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என்று கோவின் செயலி தெரிவிக்கிறது, என புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலோ, தடுப்பூசி செலுத்தியதைப் பதிவு செய்யும்போது ஏற்படும் குளறுபடிகள், அவசர கதியில் தடுப்பூசி செலுத்திவிட்டு அலைபேசிக்கு வரும் குறுந்தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல் களை சரிவர பின்பற்றாததே காரணம் என்கின்றனர், மாநகராட்சி அதிகாரிகள்.

இதுகுறித்து மாநகராட்சி நலங்குத் துறை அதிகாரிகள் கூறும்போது, “தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்னர் தகவல்கள் சரிவர பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை, வரும் குறுஞ்செய்தியை வைத்து உறுதி செய்து கொள்ள வேண்டும். சிலர் அவசர அவசரமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முற்படு கின்றனர். இதனால் தகவல் பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற்படுகின்றன.

மேலும் அலைபேசி எண்ணை இணையவழியில் தடுப்பூசி முன்பதிவு செய்ய பயன்படுத்தி விட்டு, பிறகு அதே எண்ணை அரசு தடுப்பூசி மையங்களில் கூறி பதிவு செய்துதடுப்பூசி செலுத்த முயன்றால் சான்றிதழ் பதிவாகாது. அதோடு பலருக்கு குறுஞ்செய்தி வருவது தெரிவதில்லை, தவறுதலாக அழித்து விடுகின்றனர். என்றெல்லாம் சாக்கு போக்கு தெரிவிக்கின்றனர்.

உரிய வழிகாட்டுதலை பின்பற்றி தடுப்பூசி செலுத்தியவர்கள் சான்றிதழ் வராத நிலையில், எந்த மையத்தில் தடுப்பூசி செலுத்தினார்களோ அதே தடுப்பூசி மையத்துக்கு சென்று, தொடர்புடைய பணியாளர்களிடம் விவரத்தை தெரிவித்து,  சான்றிதழ் பெற முயற்சிக்கலாம் என்றெல்லாம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் உண்மையில், ஒன்றிய அரசின் கோவின் செயலியில் பேரளவான குளறுபடிகள் இருப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. நல்லவேளையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அந்தந்த மையங்களில் முறையான தமிழ்நாடு அரசின் ஒப்புதல் முறி ஒன்று வழங்கப்படுகிறது. அதை எடுத்துக் கொண்டு சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மையங்களில்; அலைமோதிக் கொண்டுள்ளனர். பக்கமாக இருக்கிறதே என்று சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தற்போது தொலைதூர மையங்களுக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். 

இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தங்கள் செல்பேசிக்கு குறுஞ்சேதி வரும் என்ற செய்தி கூட தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் போதும் என்று அசட்டையாக இருந்து விடுகின்றனர். கோவின் செயலியை கையாள்வதில் உள்ள குழப்பங்களை அகற்ற ஒன்றிய அரசுக்து பரிந்துரைத்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மனஉளைச்சல் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டுகிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.