Show all

நரேந்திர மோடியின் தோற்றம் கொண்ட அபினந்தன் பதக்! உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தன்னார்வ வேட்பாளராகப் போட்டி

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தன்னார்வ வேட்பாளராகப்; போட்டியிடும் அபினந்தன் பதக் தலைமைஅமைச்சர் மோடியின் தோற்றம் கொண்டிருப்பது தனிக் கவனம் பெற்று வருகிறது. 

20,தை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐம்பத்தாறு அகவை அபினந்தன் பதக் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை போன்ற உருவ ஒற்றுமை உடையவர்.

பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் லக்னோ தொகுதியில் போட்டியிட அபினந்தன் பதக் முடிவு செய்தார். ஆனால், அவரது கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்துள்ளது.
இதையடுத்து, லக்னோவில் உள்ள சரோஜினி நகர் தொகுதியில் தன்னார்வ வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்துள்ளார் அபினந்தன் பதக். இதுதொடர்பாக அபினந்தன் பதக் கூறியதாவது: 

நான் ஒரு மோடி பக்தன். பாஜக என்னைப் புறக்கணிக்கலாம். யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல் அமைச்சராக வருவதற்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். மோடியும் யோகியும் ஒரு நாணயத்தின் இரு முகங்கள். தன்னலமின்றி உழைக்கும் அவர்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.

பொருளாதாரத்தில் என்னால் என் மனைவி மீரா பதக்கை ஆதரிக்க முடியவில்லை. எனக்கு 3 மகள்கள் உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். இருவரைத் தவிர, மீதமுள்ளவர்கள் திருமணமாகி சொந்த வாழ்க்கையில் பயணித்து வருகின்றனர். என் மனைவி இரு மகன்களுடன் வசித்து வருகிறார். நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு என் மனைவி என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் அரசியல்வாதியாகி சமூகத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

மணவிலக்குக்குப் பிறகு வாழ்க்கையைச் சமாளிக்க அபினந்தன் பதக் தொடர் வண்டிகளில் வெள்ளரிகளை விற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,147.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.