Show all

எகிறி அடிக்கிறது பெட்ரோல் விலை! இன்னும் என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்று விரக்தியில் பாடுகின்றனர் ஆய்வாளர்கள்

பாஜக ஆட்சியில் வரலாறுகாணாத வகையில் அனைத்து விலைவாசி உயர்வுக்கும் அடிப்படையான பெட்ரோல் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. இன்னும் என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே என்று விரக்தியில் பாடிக் கொண்டிருக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள் பாஜகவை நோக்கி.

12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டங்ளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 120 ரூபாயை தாண்டியும், டீசல் விலை லிட்டருக்கு 110 ரூபாயை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
அனுபூர், பால்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தப் பகுதிகளுக்கு தொலைதூரத்திலிருந்து பெட்ரோல், டீசல் வரவேண்டி இருப்பதால் போக்குவரத்து செலவு சேர்த்து விலை அதிகமாக இருப்பதாக பெட்ரோல் முகவர்கள் கூறியுள்ளனர். 

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 116.62 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 106.01 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை நூறைத் தாண்டி விட்டது. மானியச் சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. மானியம் வெறுமனே 25 ஆக குறைக்கப்பட்டு விட்டது. பலருக்கு அதுவும் வங்கிக் கணக்கில் வரவில்லை என்கிற குற்றச்சாட்டு. நாட்டின் பெரும்பகுதி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குறிப்பாக சிலருக்கு மட்டும், விற்றுக் கொண்டிருக்கிறது! என்னதான் செய்யக் காத்திருக்கிறது ஆர்எஸ்எஸ் இயக்கம் வழிநடத்தும் பாஜக என்று அரசியல் ஆய்வாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,051.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.