Show all

கெஜ்ரிவாலின் சீரிய யோசனை! விவேக் அக்னிகோத்ரியிடம் 'காஷ்மீர் கோப்பை' வலையொளியில் வெளியிடுமாறு பாஜகவினர் வலியுறுத்திட

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை வலையொளியில் வெளியிடுமாறு பாஜகவினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும் என்று சிறப்பான ஆலோசனை வழங்கியுள்ளார்.
 

11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: முகலாயர் ஆட்சியில், 435 ஆண்டுகளுக்கு முன்னம் அக்பர் காஷ்மீர் சமவெளியை கைப்பற்றிய பொழுது, காஷ்மீர் பார்ப்பனர்களுக்குப் பண்டிதர் எனும் பட்டத்தை வழங்கியதுடன், வேளாண்மை நிலங்களையும்; அரச பதவிகளையும் வழங்கி கௌரவம் செய்தார். 

தில்லி சுல்தானகத்திற்குப் பின் வந்த முகலாயர் ஆட்சியில் பெரும்பான்மையான காஷ்மீர பண்டிதர் இசுலாமிய சமயத்திற்கு மாறினர். எஞ்சியவர்கள் காஷ்மீர சைவ சமயத்தை பின்பற்றி வருகிறார்கள்.

காஷ்மீர பண்டிதர்கள் என்பவர்கள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த பார்ப்பனியர்கள் ஆவர். கடந்த முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால், காஷ்மீர் சமவெளியை விட்டு வெளயேறி, ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். 

காஷ்மீர பண்டிதர்கள் நிலையாக வாழ்வதற்கு சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் புலம்பெயர்ந்தோரின் அசையாச் சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, காஷ்மீரப் பண்டிதர்கள், காஷ்மீர் சமவெளியில் விட்டுச் சென்ற அசையாச் சொத்துகளை பிறர் விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ முடியாது. மேலும் இச்சட்டத்தை மீறி காஷ்மீர பண்டிதர்களின் நிலங்களை பயன்படுத்துவர்கள் அதற்கான ஈட்டுத்தொகையை, நில உரிமையாளர்களான காஷ்மீரப் பண்டிதர்களுக்கு செலுத்த வேண்டும்.

காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீர பண்டிதர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தங்களுக்கென தனி தன்னாட்சி பகுதியை நிறுவித்தர பனூன் காஷ்மீர் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். 

தங்களைக் காஷ்மீரில் மறு குடியமர்த்தவும், காஷ்மீரை விட்டு தங்கள் விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரியும் போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளன காஷ்மீரப் பண்டிதர்களின் போராட்ட அமைப்புகள்;.

காஷ்மீர் பார்ப்பனியர்களின் வரலாற்றில் கற்பனை கலந்து அண்மையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தி காஷ்மீர் பைல்ஸ். இந்தப்படத்தை பாஜகவினர் விழுந்து விழுந்து கொண்டாடி வருகின்றனர். இந்தியா குடிமக்கள் அனைவரும் கட்டாயம் இந்தப் படத்தை பார்த்தாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்கள். 

டெல்லி சட்டப்பேரவையில் நிதிநிலைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த கூட்டத்தொடரின் இடையில், 'மாநிலத்தில் தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்' என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு விடை அளிக்கும் விதமாக இன்று வியாழக்கிழமை பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை வலையொளியில் (யூடியூப்) வெளியிடுமாறு பாஜகவினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும் என்று சிறப்பான ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் 'காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டனர். நீங்கள் சுவரொட்டி ஒட்டும் வேலையை பார்த்து வருகிறீர்கள்' என்றும் கூறினார்.

முன்னதாக பீகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத், திரிபுரா, கோவா மற்றும் உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,198.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.