Show all

ஓமைக்ரானா! தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வருகையாளர் 94 பேர்களில் இருவருக்கு கொரோனா

தென்னாப்பிரிக்கா ஓமைக்ரான் குறுவிச் செய்தி வெளியானதிலிருந்து- தெரியவரும் கொரோனா நோயாளர் அனைவருக்கும் ஓமைக்ரான் இருக்குமோ என்கிற அச்சம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று வரையிலான கடந்த இருபத்தியேழு நாட்களில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளனர் என பெங்களூரு ஊரக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை குறுவித் (வைரஸ்) தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை குறுவி 10 மடங்கு வீரியம் கொண்டது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் குறுவிப் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இதற்கிடையே, இந்தியாவிலும் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கண்காணிப்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை ஓமைக்ரானா இல்லையா என்பது தெரியவரும். இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,081.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.