Show all

செய்தி: மூன்று! பேரறிவாளன் முழுமையாக விடுதலை வரிசையில்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச அறங்கூற்றுமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இதைப் பாராட்டி மகிழும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய அரசு நியமித்த தமிழ்நாட்டிற்கான ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச அறங்டகூற்றுமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.

சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர்: அரசியல் சாசன அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை என உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

தொல். திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர்: பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடையேதுமில்லை! 
வாழ்விழந்து பாதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசு என்ன செய்யப்போகிறது? ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்ட வழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. அனைத்து மக்களாட்சிச் சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழ்நாடு அரசு நல்கிய ஒத்துழைப்பால் கிட்டிய அறம். உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுர்களின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள். 

டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: ஆளுநரின் தவறான செயல்பாடுகளால் இந்த விடுதலை தாமதப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆளுநரின் செயல்பாடுகள் ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகள் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசியல் சட்ட சிக்கல்களையெல்லாம் ஆராய்ந்து உச்ச அறங்கூற்றமன்றமே இன்றைக்கு இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்.

தினகரன் அ.ம.மு.க: பேரறிவாளன் வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அற்புதம்மாள் என்ற தாய் அறங்கூற்றுமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்துச் செயல்படவேண்டியதன் கட்டாயத்தை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

கமல்ஹாசன் ம.நீ.ம: ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், அறங்கூற்றுமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,252.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.