Show all

பரபரப்பில் நாகாலாந்து! பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னெடுப்பால்

நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட, ஆராயாத பிழையான முன்னெடுப்பிற்கு, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து மக்கள் கொந்தளிப்பை தடுக்கும் வகையில் செல்பேசி, இணையம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சேதிகள் சேவைகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கோஹிமாவில் நடைபெற்ற ஹார்ன்பில் கொண்டாட்டங்களும் களையப்பட்டுள்ளன.

மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வீடு திரும்ப காத்துக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயினர். இதனையடுத்து உடன் தொழிலாளர்கள் அவர்களைத் தேடினர். அப்போது டிரக் வாகனம் ஒன்றில் 13 சுரங்க தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக வைக்கப்பட்டிருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர்தான் தீவிரவாதிகள் என்னும் ஐயப்பாட்டில், 13 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக தெரியவந்தது. இதனால் கொந்தளித்துப் போன அப்பகுதி மக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் படைத்துறை வீரர் ஒருவர் கொல்லப்பட்டாதாகச் சொல்லப்படுகிறது. மேலும் பாதுகாப்பு படையினரது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பாதுகாப்புப் படையினரின் இந்த முன்னெடுப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இம்முன்னெடுப்பு தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை நாகாலாந்து அரசு அமைத்துள்ளது. இந்த அதிர்ச்சி முன்னெடுப்பு தகவல் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக செல்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மொத்தச் சேதி சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்புக்கு படைத்துறை வருத்தம் தெரிவித்த போதும் நாகா இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது.

இதனிடையே தலைநகர் கோகிமா அருகே ஆண்டுதோறும் நடைபெறும் ஹார்ன்பில் கொண்டாட்டங்கள் களையப்பட்டுள்ளன. நாகா பழங்குடி இன மக்கள் தங்களது கலை கலாசாரத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஹார்ன்பில் நிகழ்வுகளில் அரங்கேறும். தற்போது 13 பேர் கொல்லப்பட்ட சூழலில் இந்த ஹார்ன்பில் நிகழ்ச்சிகளை மாநில அரசு களைந்துள்ளது. 

நாகாலாந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 வகை இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.

நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட, ஆராயாத பிழையான முன்னெடுப்பிற்கு, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆராயாத பிழையான முன்னெடுப்பு தொடர்பாக ஒன்றிய பாஜக அரசு உண்மையான விளக்கத்தை தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் இராகுல் காந்தி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,088.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.