Show all

தென்றல் வீசப் போகிறதா வட இந்திய மாநிலங்களில்! தெற்கிலிருந்து வீசுகிற காற்றைத் தென்றல் என்கிறது தமிழ்

வடக்கை நோக்கி வீசும் தென்றல்:- திராவிட இயக்கங்களின் அசைக்கமுடியாத வலுப்பாடு தமிழ்நாட்டில் நிலவும் வகைக்கான சமூகநீதி, மக்கள் நலம் ஆகியவை- வடக்கில் பாஜக காங்கிரஸ் அல்லாத கட்சிகளிடம்- விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவிலேயே வேளாண்மைக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆந்திரம், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இன்று தெலங்கானா உள்பட ஐந்து மாநிலங்களில் வேளாண்மைக்கு இலவச மின்சாரத் திட்டம் நடைமுறையில் உள்ளது. வீடுகளின் மின்பயன்பாட்டில் முதல் 100 அலகுகளுக்கு இலவசம் அளிப்பது இந்தியாவில் தமிழ்நாடு மட்டுந்தாம்.

வட இந்தியாவில் இதுமாதிரியான மக்கள்நல முன்னெடுப்புகள் எல்லாம் இந்தியா விடுதலைபெற்ற காலத்திலிருந்தே சாத்தியமானது இல்லை. கார்ப்பரேட்டுகள் மற்றும் சாமியார்கள் நலம்பேணல் மட்டுமே வடக்கில் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. திராவிட இயக்கங்களின் அசைக்கமுடியாத வலுப்பாடு தமிழ்நாட்டில் நிலவும் வகைக்கான சமூகநீதி, மக்கள் நலம் ஆகியவை- வடக்கில் பாஜக காங்கிரஸ் அல்லாத கட்சிகளிடம்- விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
 
வேளாண் தொழிலுக்குத் தேவையான மின்சாரமும் வீடுகள் மின்பயன்பாட்டில் முதல் 300 அலகுகளும் இலவசமாக வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 300 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேளாண் பாசனத்திற்கு தேவையான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் கோவா மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அறிவித்துள்ளார்.

எப்படியாவது இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலக் கட்சிகளின் கோட்டையாகி- இந்தியாவில் மாநிலக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையவும், கார்ப்பரேட்டுகளுக்கும், சாமியார்களுக்கும் மட்டுமே சலுகை வழங்கிக் கொண்டு ஒன்றிய ஆட்சிக்கு முனைந்து வரும் காங்கிரஸ் பாஜகவை அப்புறப்படுத்தி, இந்தியாவின் அரசியல் அமைப்பின் அட்டவணை எட்டில் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம இருக்கை வழங்கவும், மக்கள் நலம் சமூக நீதி பேணவும் செயலாக்கம் நடந்திட்டால் மகிழ்ச்சியே!
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,115.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.