Show all

நன்றி! வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும்

ஓராண்டாக- இந்த மூன்று வேளாண் சட்டத்திணிப்பில் இருந்த அதே உறுதியோடு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும், வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு நன்றி. 

13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தக்  குளிர்கால கூட்டத்தொடர் மூன்று கிழமைகள் நடைபெற இருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் கூட்டங்கள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கூட்டங்கள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக டெல்லியை முற்றுகையிட்டு போராடிய வேளாண் பெருமக்களின் தொடர் போராட்டம் காரணமாக, அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தலைமைஅமைச்சர் மோடி அறிவித்தார். வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டவரைவு பதிகை செய்யப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, ஏற்கனவே நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை களைந்திடும் வகைக்கான சட்டவரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களைக் களைந்திடும் வகைக்கான சட்டவரைவு பதிகை செய்யப்படும் என ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மூன்று வேளாண் சட்டங்களைக் களைந்திடும் வகைக்கான சட்டவரைவு பதிகை செய்யப்பட்டது. முன்னதாக, மூன்று வேளாண் சட்டங்களை களைந்திடும் வகைக்கான சட்டவரைவு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை கூடிய ஒரு சில நிமிடங்களிலேயே மதியம் 12 மணி வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 12 மணிக்கு அவை கூடிய போது, மூன்று வேளாண் சட்டங்களைக்; களைந்திடும் வகைக்கான சட்டவரைவை ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதிகை செய்தார். அப்போது எதிர்க்கட்சிகள் சட்டவரைவு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்களைக் களைந்திடும் வகைக்கான சட்டவரைவுநிறைவேற்றப்பட்டது.

ஓராண்டாக சட்டத்திணிப்பில் இருந்த அதே உறுதியோடு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும், வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு நன்றி. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,082.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.