Show all

முதல் பத்து தேடல்கள்! கூகுள் தேடலில், நடப்பு ஆண்டில், இந்தியாவில்

இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் இந்தியாவில் திரையுலகம், விளையாட்டு, அரசியல் தொடர்பான விடையங்கள் கூகுளில் அதிகம் தலைப்பாகும். இந்;த ஆண்டு அதிகம் தலைப்பானது வேறு என்பதை இந்தச் செய்தியில் அறிய முடிகின்றது.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: முடியவிருக்கிற நடப்பு ஆங்கில ஆண்டில், கூகுளில் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து என்னென்ன என்று கூகுள் பட்டியல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், கூகுள் நிறுவனம் தங்கள் தேடுபொறியில் ஆண்டு முழுக்க எது அதிகம் தேடப்பட்டது என்று விவரம் வெளியிடும். ஒவ்வொரு நாட்டிலும் ஆண்டு முழுக்க எது அதிகம் தேடப்பட்டது என்ற விவரத்தை கூகுள் வெளியிடும்.

இந்த விவரத்தை வைத்தே அந்த ஆண்டு அந்த நாட்டின்  மக்கள் மனநிலை எப்படி இருந்தது, அந்த அண்டின் தலைப்பாகியது எது, எது அதிகம் பேசப்பட்டது என்று கண்டுபிடித்துவிடலாம்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் இந்தியாவில் திரையுலகம், விளையாட்டு, அரசியல் தொடர்பான விடையங்கள் கூகுளில் அதிகம் தலைப்பாகும். 

பேரண்டப் பேரழகி ஆகி உள்ள இந்தியாவின் ஹர்ன்ஸ் சந்து குறித்து மக்கள் அதிகம் தேடி இருப்பார்கள். அல்லது துடுப்பாட்டம் பற்றி அதிகம் தேடி இருந்திருப்பார்கள். ஆனால் இப்படி எந்த விதமான தேடலும் இந்த முறை கூகுள் இந்தியாவில் அதிகம் இடம்பெறவில்லை. 

இந்தியாவில் முதல்முறையாக மக்கள் கூகுளில் ஓராண்டு முழுக்க கொரோனா குறித்தும் தடுப்பூசி குறித்தும் அதிகம் தேடி உள்ளனர்.

1. கொரோனா தடுப்பூசி பெற எப்படி பதிவு செய்வது?
2. கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை எவ்வாறு தரவிறக்கம் செய்வது?
3. உடலில் உயிர்வளி அளவை எப்படி அதிகரிப்பது?

ஆகிய மூன்று விடையங்கள் இந்தியாவில் கூகுளில் முதன்மை இடங்களை பிடித்துள்ளது. அடுத்து:

4. ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைப்பது எப்படி?
5. வீட்டிலேயே உயிர்வளி தயாரிப்பது எப்படி?
6. இந்தியாவில் டோஜ்காசு வாங்குவது எப்படி?

ஆகியவற்றையும் மக்கள் தேடியுள்ளனர். இந்தியாவில், குறிப்பாக வடஇந்தியாவில், சிறப்பாக உத்தரப்பிரதேசத்தில், கொரோனா நோயாளிகள் பலர் உயிர்வளி இன்றி அதிகம் சிரமப்பட்டனர். இந்த சமயத்தில் உயிர்வளி குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது. மக்களின் சிரமத்தை, இந்தியா கடந்து வந்த இருண்ட காலத்தை இந்தத் தேடல் முடிவு உணர்த்தி உள்ளது.

இது போக குறளிச்செலாவணி (கிரிப்டோகரண்சி) ஆர்வமும் இந்திய மக்கள் நடுவே உயர்ந்துள்ளதை கூகுள் தேடல்முடிவு காட்டுகிறது. 

7. வாழைப்பழ ப்ரட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
8. ஐ.பி.ஓவில் உள்ள ஒதுக்கீடு நிலவரத்தை எப்படி சோதிப்பது?
9. குறளிச்செலாவணியில் எப்படி முதலீடு செய்வது?
10. மதிப்பெண்களுக்கான விழுக்காட்டை எப்படி கண்டுபிடிப்பது?
இப்படி இந்த பத்து தேடல்கள் இந்திய மக்களின் முதன்மைத் தேடலாக கடந்த ஆண்டு இருந்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.