Show all

ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்தகவல்! புதிய இணையதளம் மூலம் 3 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி பதிகை செய்துள்ளதாக

தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி பதிகை செய்ய புதிய இணைய தளத்தை கடந்த வைகாசி (ஜூன்) மாதம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது.

20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி பதிகை செய்ய புதிய இணைய தளத்தை கடந்த வைகாசி (ஜூன்) மாதம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே உள்ள இணையதளத்தில் இருந்த அம்சங்களை விட இதில் பல மேம்பட்ட சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

வரிசெலுத்துனரின் வங்கி வைப்பீடுகளுக்கான வட்டியில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது, எவ்வளவு வரி செலுத்த வேண்டியது உள்ளது போன்ற விவரங்களையும் இந்த புதிய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமாம்.

இது குறித்து ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த புதிய இணையதளத்தை பயன்படுத்தி நடப்பு நிதி ஆண்டுக்கான வருமான வரியை இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டோர் பதிகை செய்துள்ளனர். இந்தத் தளத்தின் மூலம் வருமான வரி பதிகை செய்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

வரிசெலுத்துனரின் வங்கி வைப்பீடுகளுக்கான வட்டியில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது, எவ்வளவு வரி செலுத்த வேண்டியது உள்ளது போன்ற விவரங்களையும் இந்த புதிய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். வருமான வரி பதிகை செய்தவர்களின் படிவங்கள் இணையதளம் மூலமாகவே சரி பார்க்கப்படுகிறது.

ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்பேசி மூலம் ஒருமுறை கடவுச்சொல் எண் வழங்கப்பட்டு இது சரிபார்க்கப்படுகிறது. இந்த சரிபார்ப்பு முடிவடைந்ததும் திரும்ப கிடைக்க வேண்டிய வரி பிடித்தம் அவர்களது வங்கி கணக்கில் தாமதம் இல்லாமல் செலுத்தப்படுகிறது. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வருகிற 16,மார்கழி (டிசம்பர்31) கடைசி நாள் ஆகும்.

வருமான வரி பதிகை செய்யாதவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் சேதி மூலம் தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் விரைந்து வருமான வரி பதிகை செய்ய அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,089.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.