Show all

மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம் என்ற முழக்கத்துடன்! தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான இந்தப் போரட்டத்தில், போக்குவரத்துகள், பல்வேறு ஒன்றிய அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள். அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் நாடுதழுவி இயங்கவில்லை. 
 
14,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: நாட்டின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து 'மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம' என்ற முழக்கத்துடன் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்;தில் ஈடுபட்டுள்ளன.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, ஆகியவற்றின் விலை உயர்வுக்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் மயமாக்குதலை ஒன்றிய பாஜக அரசு நிறுத்த வேண்டும், காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், இந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் தொகைக்கான வட்டி 8.5 விழுக்காட்டில் இருந்து 8.1 விழுக்காடாக் குறைக்கப்பட்டது. இப்படியான ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு எதிராக முன்னெடுத்து வரும், அனைத்து அடாவடிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்;கியுள்ளன.
 
இந்தியா முழுவதும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான இந்தப் போரட்டத்தில், போக்குவரத்துகள், பல்வேறு ஒன்றிய அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள். அலுவலகங்கள், வங்கிகள் அனைத்தும் நாடுதழுவி இயங்கவில்லை. 

நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. தமிழ்நாட்டில்  பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தமிழ்நாட்டில் 67 விழுக்காடு பேருந்துகள் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,201. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.