Show all

ஆறு இலட்சம் பேர்கள்! இந்திய குடியுரிமையை வேண்டாம் எனத் தெரிவித்து வெளிநாட்டில் குடியேறியவர்கள்

இந்தியாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஆறு லட்சம் பேர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். அதற்கான காரணமாகச் சொல்லப்படுவன: வணிகம், சிறப்பான வாழ்க்கைத் தரம், கல்வி, பிள்ளைகளின் எதிர்காலம், குறைவான வரி, கொண்டாட்டம் போன்றவைகளாகும்.

இந்தியாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் பேர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.

அப்படிக் குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள இந்திய மக்களில் சுமார் 40 விழுக்காட்டு பேர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தாக ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகள் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளன.

இந்தியாவில் இருந்து தற்போது அதிகமானோர் போர்ச்சுகல், மால்டா அல்லது சைப்ரஸ் ஆகிய நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் பொன்வருகைஇசைவு வாய்ப்பை (கோல்டன் விசா) அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகில் சுமார் 30 நாடுகளில் முதலீட்டு அடிப்படையில் பொன்வருகைஇசைவு அளிக்கப்படுகிறது. இத்தகைய வருகைஇசைவு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் உள்ளது. அமெரிக்காவில் விரைவாகக் குடியுரிமை வேண்டும் என விரும்புவோர் ஈபி-5 வருகைஇசைவு முறையைத் தேர்வு செய்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள ஆறு லட்சம் பேர்களுமே இந்திய கடவுச்சீட்டை அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். அதாவது இந்த 6 லட்சம் பேருக்கும் இரட்டை குடியுரிமை கிடையாது. 

ஆனால் இவர்களால் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் (ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா) அட்டையைப் பெற்று இந்தியாவில் தங்கவும், வேலை பார்க்கவும், வணிகம் செய்யவும் முடியும்.

 இப்படி இந்தியாவில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,113.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.