Show all

கொண்டாடுவோம் சிவநாடாரை! இந்தியாவில் மூன்றாம் இடம் பெறும் தமிழ்நாட்டுப் பணக்காரர் 

பொதுவாக- பணக்காரரைக் கொண்டாடும் மரபு தமிழருடையது இல்லை என்றாலும், பணக்காரரை கொண்டாடுவதால் பிழை நேர்ந்து விடாது என்ற கருதுகோளில், இந்தியாவின் மூன்றாம் இடம் பெறும் பணக்காரர் சிவநாடாரை பாராட்டுவோம் இந்தக் கட்டுரையில்.

18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பொதுவாக- பணக்காரரைக் கொண்டாடும் மரபு தமிழருடையது இல்லை. இந்த அடிப்படையைச் சாதகமாக்கிக்கொண்டு, ஒன்றிய அரசில் அமைந்த வடஇந்தியத் கட்சித் தலைமைகள், சொத்துக் குவிப்பு வழக்கை முன்னெடுத்து, தமிழ்நாட்டு ஆட்சிக்கு முனையும்  கட்சிகளை முடமாக்கி கொக்களிப்பது உண்டு. இது பிழை.
 
ஆனால், பணக்காரரை கொண்டாடுவதால் பிழை நேர்ந்து விடாது என்ற கருதுகோளில், இந்தியாவின் மூன்றாம் இடம் பெறும் பணக்காரர் சிவநாடாரை பாராட்டி பெருமை சேர்க்க முனைந்துள்ளோம்.

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. இந்த ஆண்டும் அவரே அந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். என்று பட்டியல் இட்டுள்ளது, இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான முதல் 10 பணக்காரர்களையும், அவர்களது சொத்து விவரங்களையும் வெளியிட்டுள்ள {ஹருன் இந்தியா என்கிற அமைப்பு.

1. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் குழுமம்) - ரூ. 7,18,000 கோடி
2. கௌதம் அதானி (அதானி குழுமம்) - ரூ. 5,05,900 கோடி
3. சிவ நாடார் (ஹெச்.சி.எல்) - ரூ. 2,36,000 கோடி
4. எஸ்.பி.ஹிந்துஜா (ஹிந்துஜா குழுமம்) - ரூ. 2,20,000 கோடி
5. லட்சுமி மிட்டல் (மிட்டல் குழுமம்) - ரூ. 1,74,400 கோடி
6. சைரஸ் பூனாவாலா (சீரம் இன்ஸ்டிட்யூட்) - ரூ. 1,63,700 கோடி
7. ராதாகிஷன் தமானி (அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்) - ரூ. 1,54,300 கோடி
8. வினோத் ஷாந்திலால் அதானி (அதானி குழுமம்) - ரூ.1,31,600 கோடி
9. குமார் மங்கலம் பிர்லா (ஆதித்யா பிர்லா) - ரூ.1,22,200 கோடி
10. ஜெய் சௌத்ரி (ணுளஉயடநச)- ரூ.1,21,600 கோடி.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவரான சிவநாடார், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் இருக்கிற பணக்காரர். இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஹிந்துஸ்தான் கணினி வரை நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி மற்றும் ‘சிவ நாடார் அறக்கட்டளையின்’ தலைவரும் ஆவார். 

சிவ நாடார் அவர்கள், 31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5047 அன்று (14.07.1945) தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, மூலைபொழி என்ற கிராமத்தில், சிவசுப்ரமணி நாடார் என்பவருக்கும், வாமசுந்தரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். 

157 ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளையர் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட, கும்பகோணத்திலுள்ள நகர தொடக்கப்பள்ளியில், (இன்று அந்தப்பள்ளி தமிழ்நாடு அரசின் உதவிபெறும் நகரமேல்நிலைப் பள்ளியாகும்) தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய சிவ நாடார், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரி புகுமுக வகுப்பையும் முடித்தார். பிறகு கோயமுத்தூரிலுள்ள பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்நேரியல் துறையில் பட்டம் பெற்றார். 

தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, தில்லிக்கு சென்ற அவர், அங்கு டி.சி.எம் வரை என்ற நிறுவனத்தில் ஒரு பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், சிவ நாடார் சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவே, தன்னுடன் பணிபுரியும் ஆறு உடன் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஐப்பத்தியோர் ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எம் இந்தியாவிலிருந்து வெளியேறும்போது, சிவ நாடார் தன்னுடைய ஹிந்துஸ்தான் கணினி வரை நிறுவனத்தைச் சிறப்பாகத் தொடங்கினார். முப்பத்தியொன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்துஸ்தான் கணினி வரை நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், ஹிந்துஸ்தான் கணினி வரை நிறுவனக் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் எண்பது விழுக்காடு பெறுகியுள்ளது. ஹிந்துஸ்தான் கணினி வரை நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றே கூறலாம். 

தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார் சிவநாடார். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவ நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையின் பெயரில் சிவசுப்ரமணி நாடார் பொறியியல் கல்லூரியை சென்னையில் நிறுவினார்.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு ‘முனைவர் பட்டம்’ கொடுத்து சிறப்பித்தது.

அடுத்த ஆண்டே இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையில், இவரின் மாபெரும் பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம பூசன் விருதை’ அளித்து சிறப்பித்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கரக்பூரில் உள்ள “இந்திய தொழில்நுட்ப கழக” குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தன்னுடைய வாழ்க்கையில் சரியான பாதையை தேர்தெடுத்து, மிக விரைவில் இலக்கினை அடைந்து, குறுகிய காலத்திற்குள் ஷிவ் நாடார் தனது கடின உழைப்பால் புகழின் உச்சியை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,026.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.