Show all

அது சமஸ்கிருத உறுதிமொழியா! ஹிந்துத்துவா பிற்போக்கு கருத்துக்களை உள்ளடக்கிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி

இந்தியாவில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஹிந்துத்துவா இயக்க கோட்பாட்டின்படி, ஹிந்து ராஷ்டிரியக் கருத்துக்களை திணிக்கும் நோக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மருத்துவத்துறையில் நடப்பில் உள்ள உறுதிமொழியை மாற்றி அமைக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியே இந்த அடாவடி முன்னெடுப்பு

19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில், பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சம்சுகிருதத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்;டதாக செய்தி பரவிவந்தாலும், அவர்கள்  ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதனால்தான் பாஜகவினரின் அந்தக் களவாணித்தனம் உடனடியாக கண்டுபிடிக்கப் படாமல் போனது. 

ஆனால் அவர்கள் எடுத்துக் கொண்டது - மருத்துவ மாணவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் ஆங்கில மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் இப்போகிரேடிக் மனிதநேயத்தின் அடிப்படிப்படையில் வரையறுத்துக் கொடுந்திருந்த இப்போகிரேடிக் உறுதிமொழி அல்ல. இப்போகிரேடிக் உறுதிமொழியைத்தான் உலகம் முழுவதும் உள்ள மருத்துவம் பயிலும் மாணவர்கள் இதுவரை எடுத்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் மருத்துவப் படிப்பை தொடரும் மருத்துவ மாணவர்கள், 'இப்போகிரேடிக்' என்னும் உறுதிமொழியை எடுத்துக்கொள்வது வழக்கம். ஆங்கில மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் இப்போகிரேடிக் மனிதநேயத்தின் அடிப்படிப்படையில் வரையறுத்துள்ள மெய்யியலே இப்போகிரேடிக் உறுதிமொழியாகும். அதன்படி இத்தகைய உறுதிமொழியை உலகம் முழுவதும் உள்ள மருத்துவம் பயிலும் மாணவர்கள் எடுத்து வருகின்றனர்.

அதேவேளையில், இந்தியாவில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஹிந்துத்துவா இயக்க கோட்பாட்டின்படி, ஹிந்து ராஷ்டிரிய கருத்துக்களை திணிக்கும் நோக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு, இந்த உறுதிமொழியை மாற்றி அமைக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளது. அண்மையில், மருத்துவப் படிப்பிற்கான உறுதிமொழியை மாற்ற மருத்துவ கல்வி ஒழுங்குமுறை ஆணையமான ஒன்றிய மருத்துவ ஆணையம் மூலம் மோடி அரசு முன்வந்துள்ளது.

அதன்படி, இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு மாற்றாக, 'மகரிஷி சரக் சப்த்' என்ற சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்கவேண்டும் என பரிந்துரைத்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தநிலையில், ஒன்றிய நலங்குத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'மகரிஷி சரக் சப்த்' மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கும், கட்டாயப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் 'மகரிஷி சரக் சப்த்' உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ள அடாவடி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில், பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் 'மகரிஷி சரக் சப்த்' உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. கல்லூரி நிர்வாகம் இது மாணவர்களே தன்னார்வமாக உறுதிமொழி எடுத்து வாசித்ததாக கூறி, தப்பிக்க முயன்றது. ஆனால், பலரும் அதனை ஏற்கமறுத்து, சம்பந்தப்பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது ஒருபுறமிருக்க, மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி பிற்போக்கு கருத்துக்களை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி ஆயுர்வேத அறிஞர் சரகரின் மெய்யியல் ஆகும். அந்த மெய்யியலின் படி, வேள்வித் தீயின் முன்பு பிராமணர்கள், மருத்துவர்களுக்கு ஒழுங்கை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மருத்துவர் வாழும் காலங்களிலும், இறந்தபின்னரும் உள்ள எல்லா உயிர்களுக்கும், பசுக்களுக்கும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, மன்னரால் வெறுக்கப்படுவோருக்கோ, மன்னரை வெறுப்போருக்கோ மருத்துவம் அளிக்கக்கூடாது கணவர் இல்லாமல் மனைவிக்கு மருத்துவம் அளிக்கக் கூடாது என்பது போல ஏராளமான பிற்போக்கு கருத்துக்களைக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பலரும் கண்டனங்களை எழுப்பி வந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அரசு மதுரை மருத்துவக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில், இப்போகிரேடிக் உறுதிமொழிக்க மாற்றாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும் . இதன் பொருட்டு மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் இரத்தினவேல் அவர்கள் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்.

மேலும், தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததிற்கு துறை அடிப்படையான விசராணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநர் மருத்துவர் நாரயணபாபு அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்திரவு இட்டுள்ளார்.

மேலும், அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் இனிவரும் காலங்களில் அனைத்து துறை தலைவர்களும் எப்பொழுதும் பின்பற்றப்படும் இப்போகிரேடிக் உறுதிமொழியையே தவறாது கடைபிடிக்க மருத்துவக்கல்வி இயக்குநர் மூலம் சுற்றிக்கை வாயிலாக அறிவுறுத்தப்படும்' எனத் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு அரசின் இத்தகைய உடனடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,236. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.