Show all

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது! சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத்

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது. பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள், காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் குறிவைக்கப்படுகின்றனர், என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத்.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது. பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள், காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் குறிவைக்கப்படுகின்றனர். 

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உள்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் விளக்கம் தர வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத்தகுதி சட்டப்பிரிவு 370- நீக்கிய பிறகும், ஒன்றிய பாஜக அரசு மாறும் என்று தெரிவித்ததான சூழல் எதுவும்  மேம்படவில்லை. மாறாக பயங்கரவாதம்தான் அதிகரித்துள்ளது' என்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீரில் தங்கியிருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தீவிரவாத தாக்குதலுக்குப் பயந்துகொண்டு, சொந்த ஊர்களுக்குக் குடும்பங்களுடன் திரும்பி வருகின்றனர். இது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் சொல்லும்போது, இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பிழைப்பு தேடி குழந்தைகளுடன் வந்து இங்கு தங்கியிருந்தோம். இப்போது எங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்புகிறோம் என்கிறார். 

காஷ்மீரில், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஜம்மு - காஷ்மீரில், இந்த மாதத்தில் மட்டும், இதுவரை 11 பேர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, வெளிமாநிலத்தவரை காஷ்மீரில் இருந்து விரட்டும் திட்டத்துடன் தீவிரவாதிகள் செயல்படுவதாக பேசப்படுகிறது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய பாதுகாப்புப் படையினர், பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு உடையதாக கூறி, 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 11 பேர்களை சுட்டுக் கொன்ற, 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளையும், பாதுகாப்புப் படையினர் தேடி கண்டுபிடித்து சுட்டு கொன்றனர். பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதிகளில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,040.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.