Show all

இன்று இந்தியாவின் 73வது குடியரசுநாள்!

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 15 மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. இன்று கொண்டாடப்படும் இந்திய ஒன்றியத்தின் 73வது குடியரசு நாளில் ஒன்றியத்தை ஆளும் பொறுப்பில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்கள் அதற்கான செயல் தளத்தில் உறுதியாகச் செயல்பட நமது வாழ்த்துக்கள்.

13,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட நாளே குடியரசு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 15 மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்கிறது. இன்று கொண்டாடப்படும் இந்திய ஒன்றியத்தின் 73வது குடியரசு நாளில் ஒன்றியத்தை ஆளும் பொறுப்பில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்கள் அதற்கான செயல் தளத்தில் உறுதியாகச் செயல்பட நமது வாழ்த்துக்கள்.

குடியரசு நாளன்று இந்தியாவின் தலைநகர் தில்லியில் குடியரசுத் தலைவர் தலைமையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, சேனையின் சிறந்த  வீரர்களுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கங்களை வழங்கி கவுரவிப்பார். 

இந்திய ஒன்றியத்தின் 73வது குடியரசு குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் சேனை மற்றும் ஒப்பனை ஊர்திகளின் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. குடியரசு நாளை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்தியா விடுதலை அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசாக அறிவிக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் 13,தையில் (ஜனவரி 26) இந்தியாவில் குடியரசுநாள் கொண்டாடப்படுகிறது.

குடியரசுத் நாளை முன்னிட்டு ஒன்றியப் போர் நினைவிடத்தில் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்த இருக்கிறார். அங்கு இருக்கும் போர் வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து இரங்கல் செலுத்த உள்ளார். பின்னர் முப்படை அணிவகுப்பு நடக்க உள்ளது.

இந்த அணிவகுப்பின் மரியாதையை தேசிய கொடி ஏற்றிய பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார். பின்னர் அங்கு குடியரசு நாள் கவுரவ பரிசுகளை தலைமைஅமைச்சர் மோடி வழங்குவார். இதையடுத்து பல்வேறு 25 ஒப்பனை ஊர்திகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும். 

தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அங்கு நடக்க உள்ளன. இந்தியச் சேனை பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று அறியமுடிகிறது. மேம்பட்ட இலகுரக உலங்கி, அதிநவீன தானுலங்கி உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை திறன்வினைகளும் நடைபெற உள்ளன. 

குடியரசு நாளை முன்னிட்டு அரசப்பாதையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து செல்ல இருக்கின்றன. கொரோனா பரவலை முன்னிட்டு டெல்லியில் 5000- 8000 அளவிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,140.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.