Show all

ஆம்ஆத்மி கட்சிக்கு இந்தியாவில் கிடைத்த இரண்டாவது மாநிலம்! பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது

பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி தொண்டர்கள் குதூகலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் காலை 11 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் 13 இடங்களிலும் சிரோமணி அகாலிதளம் கட்சி 9 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

இதையடுத்து காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது. ஏற்கெனவே தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் முதன்முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது. 

அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான்,  துரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து அவரது வீட்டின் அருகே ஆம்ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.