Show all

ஓ இது நல்லா இருக்கே! வேலை பார்க்கும்போது முப்பது மணித்துளிகள் தூங்கலாம் என்பதாக ஒரு நிறுவனத்தின் புதிய முயற்சி

வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்கும் அனுமதியை வழங்கிட  பெங்களூர் நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்க அனுமதிக்கும் ஒரு புதிய முயற்சியை  பெங்களூர் நிறுவனமொன்று முன்னெடுத்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 'வேக் பிட்' என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 30 மணித்துளிகள் தூங்கும் இடைவேளையை அறிவித்துள்ளது.

இதன்படி ஊழியர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அலுவலகத்தில் தூங்கிகொள்ளலாம். இதற்காக வசதியான படுக்கைகளும், ஓசையில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் சைதன்யா ராமலிங்ககௌடா கூறியதாவது: நண்பகல் நேரத்தில் தூங்குவது நமது நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும். நாசாவின் ஆய்வு ஒன்றில் 26 மணித்துளி தூக்கம் நமது உழைப்பாற்றலை 33 விழுக்காடு அதிகரிப்பதாக கூறுகிறது. ஹார்வேர்ட் ஆய்வு ஒன்று நண்பகல் தூக்கம் நமக்கு ஏற்படும் சோர்வை தடுப்பதாக கூறுகிறது. இதனால் அனைவருக்கும் தூங்கும் இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.