Show all

குடியிருப்பை காலி செய்க! டாடா குழுமத்திடம், ஒன்றிய அரசு கையளித்த, சுமார் 7ஆயிரம் ஊழியர்களுக்கு கவனஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டாட்டா குழுமம், ஏர் இந்தியா ஊழியர்கள் ஆறு மாதத்தில் நிறுவன குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்திடம் ஒன்றிய அரசு விற்பனை செய்தது. இதனை ஒன்றிய அரசும், டாட்டா நிறுவனமும் அதிகாரப்பாடாக அறிவித்துள்ளன.

ஏர் இந்தியாவின் மொத்த கடன் தொகை ரூ. 61,562 கோடியாகும். இதில் டாட்டா 15,300 கோடி கடனை ஏற்றுக் கொள்கிறது. அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ. 2700 கோடியை டாட்டா நிறுவனம் அளிக்கும் வகைக்கு, இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், அதனை தொடங்கி நடத்திய டாட்டா குழுமத்தின் கைகளுக்கே சென்றுள்ளது. 
இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டாட்டா குழுமம், ஏர் இந்தியா ஊழியர்கள் ஆறு மாதத்தில் நிறுவன குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதைக் கண்டித்து அடுத்த மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அமைச்சருக்கு மடல் எழுதியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ள, டாட்டா குழுமத்தின் இந்த முனைப்பு தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய விமான போக்குவரத்து  அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், ஏர் இந்தியா நிறுவனத்தை கைமாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான ஆறு மாதங்களுக்குள் ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று கவனஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த கவனஅறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு குடியிருப்புகளை காலி செய்யவில்லை என்றால்  ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஊழியர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். தனியார்மயம் குறித்து கருத்து கூறுவது என நோக்கம் அல்ல. ஆனால், தனியார் மயத்துக்கு பின் ஊழியர்களின் நிலை என்ன என்பதை நிர்வாகத்தின் அணுகுமுறை காட்டுகிறது. அவர்களின் மதிப்புக்கு  சவால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,037.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.