Show all

துக்க மிகுதியில் தமிழ்நாடு! நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை

மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட பேரதிர்ச்சி நிகழ்வு, கூழையூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்க மிகுதியில் தமிழ்நாடும், ‘திமுகவைத் தேர்ந்தெடுத்தும் பாழாய்ப்போன பாஜக அடாவடிக்கு முடிவு கொண்டு வரமுடியவில்லையே அங்கலாய்கிறது.

27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: சேலம் மாவட்டம் மேட்டூர்அணை அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி இணையரின் மகன் இருபது அகவை தனுசு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வில் விடாப்பிடியாக கலந்துகொண்டு  வந்துள்ளார்.

இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். இந்நிலையில், இன்று 3-வது முறையாக நீட் தேர்வு எழுத தனுசு தீவிரமாக தயாராகி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 1 மணி வரை மாணவர் தனுசு தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தப் பேரதிர்ச்சி நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட பேரதிர்ச்சி நிகழ்வு, கூழையூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்க மிகுதியில் தமிழ்நாடும், ‘திமுகவைத் தேர்ந்தெடுத்தும் பாழாய்ப்போன பாஜக அடாவடிக்கு முடிவு கொண்டு வரமுடியவில்லையே அங்கலாய்கிறது.

இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தனுசு தற்கொலை செய்து கொண்டது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும், முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது மாணவர் தனுசின் பெற்றோர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை பிடித்து கொண்டு கதறி அழுதனர்.

இதையடுத்து பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார். அப்போது மாணவரின் தந்தையிடம் தங்கள் மகன் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்து விட்டார். என்று ஆறுதல் தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுசு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய பாஜக அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.

மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும், கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன் என தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, நீட் தேர்வு அச்சத்தில் மாணவன் தனுசு தற்கொலை செய்ததை அறிந்து வேதனை அடைந்தேன். நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது.

மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமத்தை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு புரிந்துகொள்ளவில்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நீட் தேர்வை கைவிடும் வரை இந்த சட்டப் போராட்டம் தொடரும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமுன் வரைவு நாளை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.