Show all

தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் இடம், மூன்றாவது முறையாக! 'இமாஒநி'யின் நலங்குத் துறை தரவரிசைப் பட்டியலில்

ஒன்றிய அரசின் 'இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவன' அமைப்பு வெளியிட்ட, நலங்குத்துறை தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் இடம் பெற்றுவருகிறது, மூன்றாவது முறையாக

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசின் 'இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவன' அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலங்கு உட்கட்டமைப்பையும் ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை 3 கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 4-ம் கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் பெரிய மாநிலங்களுக்கான நலங்குத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளாவுக்கு மொத்தம் 82.20 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முந்;தைய இரண்டு முறையும் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலிலும் கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3-வது இடத்தில்  69.66 மதிப்பெண்களுடன் தெலுங்கானா மாநிலமும், 4-வது இடத்தில் 69.95 புள்ளிகளுடன் ஆந்திர பிரதேசமும் உள்ளன. ஒன்றிய அரசின் 'இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவன' அமைப்பு வெளியிட்டுள்ள முதல் 4 இடங்களை தென் மாநிலங்களே பெற்றுள்ளன. 

5-வது இடத்தில் மகாராஷ்டிரா, 6-வது இடத்தில் குஜராத், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் அடுத்தடுத்து முதல்பத்து இடங்களில் உள்ளன.

இந்த சுகாதாரத் துறை பட்டியலில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலம் வெறும் 30.57 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. 

அதேபோல சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் மிசோரம் முதல் இடத்தில் உள்ளது. ஒன்றியப் பகுதிகளுக்கான பட்டியலில் டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வேகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் ஒன்றிய அரசின் 'இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவன' அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உலக வங்கியின் உதவியுடன் நலங்கு மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்தப் பட்டியலை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,110.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.