Show all

அசைந்து கொடுக்கப் போகின்றாராம் ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு சட்டப்பாடாக வேண்டாம் என்று மறுக்கும் வகைக்கான முதல்படிகட்டு நீட் விலக்கு சட்டமுன்வரைவு ஆகும். அந்த முதல்படிகட்டை கடக்கவிடாமல் பெருமழையில் சாலையின் குறுக்கே விழுந்து, அகற்ற ஆள்இல்லாத மரம் மாதிரி, நெடுங்காலமாக தடுத்துக் கொண்டிருப்பர்தான் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நியமித்த ஆளுநர். ஆர்.என்.ரவி. ஆவார்.

05,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டின், மருத்துவக் கல்வி உடைமையான மருத்துவக் கல்லூரிகளை, வடஇந்திய மாநிலங்களுக்கு பிடுங்கி அளிப்பதற்கான, ஒன்றிய பாஜக அரசின் நீட் வேண்டாவே வேண்டாம் என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டினரின் நிலைப்பாடு ஆகும். 

நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு சட்டப்பாடாக வேண்டாம் என்று மறுக்கும் வகைக்கான முதல்படிகட்டு நீட் விலக்கு சட்டமுன்வரைவு ஆகும். அந்த முதல்படிகட்டை கடக்கவிடாமல் பெருமழையில் சாலையின் குறுக்கே விழுந்து, அகற்ற ஆள்இல்லாத மரம் மாதிரி, நெடுங்காலமாக தடுத்துக் கொண்டிருப்பர்தான் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நியமித்த ஆளுநர். ஆர்.என்.ரவி. ஆவார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு மூலமாக, தமிழ்நாட்டின் மருத்துவ இடங்கள் வடமாநில மாணவர்களுக்குப் பிடுங்கி அளிக்கும் அடாவடி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும், உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்பை மேற்கொள் காட்டி நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கத் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

முதல்முறையாக நீட் விலக்கு சட்டமுன்வரைவு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டே நிறைவேற்றப்பட்டது. நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த சட்டமுன்வரைவு தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 6 மாதங்களாக இந்தப்பாட்டில் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த தீர்மானத்தைத் திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து கடந்த மாதம் சிறப்புச் சட்டமன்றம் கூட்டப்பட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு மீண்டும் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. 

இருப்பினும், இந்த நீட் தீர்மானத்திலும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நியமித்த ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் விலக்கு தமிழக அரசியலில் முதன்மைத்துவம் வாய்ந்தது என்பதால் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததது.

நீட் விலக்கு தீர்மானத்தில் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நியமித்த ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், இல்லையென்றால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 

இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டை ஓட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் தேநீர் விருந்தை அறிவித்து இருந்த நிலையில், அதைப் புறக்கணிப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், திமுக தோழமை கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.

இந்தச் சூழலில் நீட் விலக்கு சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

நாளது 29,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (13.03.2022) 2ஆவது முறையாக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த சட்ட முன்வரைவை விரைவில் அவர் குடியரசுத் தலைவரிடம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் 11 சட்டமுன்வரைவுகள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த நகர்த்தல்- தமிழ்மக்களின் முயற்சி என்கிற தொடர் மழைக்கு, பாஜக எறுமை கொஞ்சம் அசைந்து கொடுத்ததாகப் பார்க்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,222.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.