Show all

257 கோடி ரூபாய் பணம் பறிமுதல்! கடந்த 120 மணிநேரமாக ஊடகங்கள் முன்னெடுத்துவந்த பரபரப்பு முடிந்தது.

சுமார் 120 மணி நேரம் நீட்டித்த வருமான வரித்துறையினரும், சரக்குசேவைவரி நுண்ணறிவு இயக்குநரகமும் இணைந்து நடத்திய, 257 கோடி ரூபாய் பணம் தொடர்பான சோதனை, தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின். திருமூர்த்தி பிராக்ரன்ஸ் என்ற நறுமண எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், அதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார். இது தவிர வேறு சில நிறுவனங்களையும் இவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தி வருகிறார். 

இவர் அதிகமான சொத்துகளைச் சேர்த்து வைத்திருப்பாக கிடைத்த தகவலின் பேரில்- அவர், தான்சம்பாதிக்கும் முழுவருமானத்துக்கும் வரிமான வரி செலுத்தியிருக்க வாய்ப்பில்லை என்பதாக- அவர்வீட்டில் சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் துறைசார்ந்து திட்டமிட்டு, அதிரடியாக அவருக்குச் சொந்தமான வீடுகளிலும், நிறுவனங்களிலும் கடந்த 120 மணிநேரமாக முன்னெடுத்த சோதனைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.  

தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான கான்பூர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், தொழில் அதிபர் கட்டுக் கட்டாகப் பணத்தைத் தொகையாகவே வைத்திருந்தது தெரிய வந்தது. 

அந்தத் தொகை முழுவதும் வரிமான வரிசெலுத்தப்பட்ட வகையில் வருமா? என்பதை ஆய்வு செய்யும் வகைக்கு, அந்த முழுத்தொகையையும் கைப்பற்றிய வருமானவரித் துறையினர், அந்தப் பணத்தை இயந்திரங்கள் மூலம் எண்ணத் தொடங்கினர். 

தொகை பேரளவாக இருந்த காரணம் பற்றி உதவிக்கு மாநில வங்கி அலுவலர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் உதவியுடன் பணம் எண்ணும் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்றது.

சுமார் 120 மணி நேரம் நீட்டித்த வருமான வரித்துறையினரும், சரக்குசேவைவரி நுண்ணறிவு இயக்குநரகமும் இணைந்து நடத்திய இந்த அதிரடி சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சோதனையில் மொத்தம் 257 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 விலை உயர்ந்த சொத்துகள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதில் மும்பை, டெல்லி மட்டுமின்றி துபாயிலும் அவருக்குச் சொந்தமாக 2 சொகுசு வீடுகள் உள்ளது தெரியவருகிறது.

மற்றும் தங்க நகைகள், தங்க கட்டிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். உத்தரப் பிரதேசத்தின் கனௌஜில் உள்ள அவரது வீட்டில் 18 பாதுகாப்பு பெட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 500க்கும் மேற்பட்ட சாவிகளும் இருந்த நிலையில், அந்தச் சாவிகளைக் கொண்டு பாதுகாப்புப் பெட்டிகளைத் திறக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தந்தை சிகிச்சைக்காக டெல்லி சென்றிருந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின், இந்த அதிரடி சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக கனௌஜ் திரும்பினார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 50 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். மேலும் தொடர் விசாரணைக்கு தொழிலதிபர் பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். 

உலகில் வருமான வரி வாங்காத பல நாடுகள் உண்டு. அனால் இந்தியாவில் ஆண்டுக்கு 250000க்கு மேல் வருமானம் ஈட்;டுகிறவர்கள் வருமானத்திற்கான கணக்கை பதிகை செய்து ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்த வேண்டும்.

ஆக இரண்டரை இலட்சத்திற்கு மேலான பணத்தின் மீது 'பணத்தீண்டலுக்கு நிபந்தனை என்கிற பணத்திண்டாமை நடைமுறை' சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எண்பது விழுக்காட்டு மக்கள் நமக்கேன் வம்பு என்று தொழில் வணிகம் செய்யவே முனைவதில்லை. உடல் உழைப்புக் கூலியாகவோ நிருவாகக் கூலியாகவோ பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த வரம்பைத்தாண்டி வருமானம் ஈட்டும் நிருவாகக் கூலிகளின் வருமானத்திற்கான கணக்குப் பதிகையை அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றனர். 

தமிழ்நாட்டில், பெரும்பகுதி மக்கள் தொழில் வணிகத்தில் ஈடுபாட்டாலும், தங்கள் வருமானம் ஆண்டுக்கு 250000க்கு மேல் வராமல் கவனமாக இயங்கி வருகின்றனர். அதனால் தமிழ்நாட்டில் பெருந்தொழில் முனைவோர்கள் வட நாட்டினராகவோ, அயல்நாட்டினராகவோ இருக்கின்றனர். 

இந்தியாவில் முன்னெடுக்கப்படும் கல்வியும் கூலிகளை உருவாக்குதற்கான கல்வியாகவே இருந்து வருகிறது. அதனால் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள எந்த உயர்தொழில் நுட்பக் கருவியும் அயல் நாட்டுத் தயாரிப்பாகவே இருக்கும். 

இந்தியாவின் அடையாளம் என்று நிறுவிய படேல் சிலையிலிருந்து நமது குழந்தைகளுக்கு விளையாட வாங்கித் தருகிற சிறுசிறு விளையாட்டுப் பொருட்கள் வரை சீனத்தயாரிப்பாக இருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்திய விடுதலை பெற்ற காலத்திலிருந்து இந்த வருமான வரிவரம்பு பெரிதாக உயர்த்தப்படாமல்- இரண்டரை இலட்சத்திற்கு மேலான பணத்தின் மீது 'பணத்தீண்டலுக்கு நிபந்தனை என்கிற பணத்திண்டாமை நடைமுறை' சட்டமாக தொடர்ந்து வருவதால் இந்தியாவில் தொழில் வணிக வளர்ச்சி அயலவர்களின் அறிவாகவே இருந்து வருகிறது. 

இந்த அழகில் வருமானவரித் துறைக்கு அப்பாற்பட்டு இப்படியெல்லாம் நடப்பதான கருத்துப்பரப்புதல் மூலம் பணத்தீண்டாமையை யாரும் மீறிவிடக்கூடாது என்பதற்காக அடிக்கடி இப்படி அதிர்ச்சி முன்னெடுப்புகள் அரங்கேற்றப்படுகின்றன. ஊடகங்களும் மக்களுக்கு கொஞ்ச நாளைக்கு இந்த வகைப்பேய்படம் கட்டி மகிழ்கின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,110.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.